Home /News /tamil-nadu /

பவர் கட் முதல்.. சென்னை அணி த்ரில் வெற்றி வரை.. இன்றைய தலைப்புச் செய்திகள் (ஏப்ரல் 22-2022)

பவர் கட் முதல்.. சென்னை அணி த்ரில் வெற்றி வரை.. இன்றைய தலைப்புச் செய்திகள் (ஏப்ரல் 22-2022)

மின்தடை

மின்தடை

Headlines Today : நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, நாட்டின் பெரும்பாலான மாநிலங்களிலும் 8 மணிநேரம் அளவுக்கு மின் தடை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, நாட்டின் பெரும்பாலான மாநிலங்களிலும் 8 மணிநேரம் அளவுக்கு மின் தடை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  கரூர் மாவட்டத்தில் 2வது நாளாக தொடர்ந்து நேற்று அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்ததால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இதேபோல பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

  கோவை புறநகர் பகுதிகளில்  இரவு நேரங்களில் 2 மணி நேரத்துக்கும் மேலாக  தொடர்ந்த மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

  இரண்டு நாள் சுற்று பயணமாக இந்தியா வந்துள்ள பிரட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார்.

  குரு தேக் பகதூரின் 400வது பிறந்த நாள் நிறைவு கொண்டாட்டத்தை ஒட்டி 400 ரூபாய் நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

  கோர்பிவேக்ஸ் தடுப்பூசியை 5 முதல் 11 வயது வரையிலான சிறாருக்கு பயன்படுத்துவற்கான அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் வழங்கியுள்ளது.

  டெல்லியில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று 965 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  சென்னை கிண்டி ஐஐடி வளாகத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

  கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் இன்றும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. தேரோட்டம் வரும் 29ம் தேதி நடைபெறவுள்ளது.

  திருப்பூர் மாவட்டம் முத்தணம்பாளையத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  மதுரையில் கழிவு நீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் பொழுது உள்ளே மாட்டிக் கொண்ட 3 துப்புரவு பணியாளர்கள் விஷ வாயு தாக்கி உயிரிழந்துள்ளனர்.

  கோவில்பட்டி அருகே ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்பட்ட மாநில அளவிலான மகளிர் கபாடிப் போட்டியில் சென்னை சிட்டி போலீஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

  வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த விசைப்படகு உரிமையாளர்களுக்கு 4 கோடியே 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது

  ஹைதி நாட்டின் தலைநகரில் சிறிய வகை விமானம் ஒன்று சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

  பேட்டரி வாகனங்களில் ஏற்படும் தீவிபத்துகளைத் தடுக்க அரசுக்கு பரிந்துரை வழங்க வல்லுனர் குழுவை அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

  தோனி அதிரடி ஆட்டத்தால் கடைசி பந்தில் மும்பை அணியை வீழ்த்தி சென்னை அணி த்ரில் வெற்றி பெற்று இருக்கிறது.

  Must Read : தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மாலையில் மட்டும் மின் உற்பத்தி செய்ய மத்திய அரசு நிர்பந்தம்?- காரணம் என்ன?

  மங்கோலியாவில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் சரிதா மோர் மற்றும் சுஷ்மா ஷோக்கீன் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.

  புகையிலை நிறுவனத்தின் விளம்பர தூதர் பொறுப்பில் இருந்து நடிகர் அக்சய் குமார் விலகினார்.

  மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்த trance படத்தின் தமிழ் டப்பிங் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.

  உக்ரைனின் மரியுபோல் நகரை ரஷ்ய ராணுவம் கைப்பற்றிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Suresh V
  First published:

  Tags: Headlines, Today news, Top News

  அடுத்த செய்தி