ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பிரிட்டன் பிரதமர் இந்தியா வருகை முதல் திருப்பதியில் லட்டு தட்டுப்பாடு வரை.. இன்றைய தலைப்புச் செய்திகள் (ஏப்ரல் 21-2022)

பிரிட்டன் பிரதமர் இந்தியா வருகை முதல் திருப்பதியில் லட்டு தட்டுப்பாடு வரை.. இன்றைய தலைப்புச் செய்திகள் (ஏப்ரல் 21-2022)

திருப்பதி லட்டு

திருப்பதி லட்டு

Headlines Today : திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழக ஆளுநரின் செயல்பாடுகளை கண்டித்து ஏப்ரல் 28ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் அறிவிப்பு.

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நேற்று இரவு அறிவிக்கப்படாத மின்வெட்டு. திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதி.

கூவாகத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற கூத்தாண்டவர் கோயில் தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினத்தில் வேப்ப மரத்தில் பால் பொங்கி வருவதை கண்ட பொதுமக்கள், மரத்திற்கு மஞ்சள் புத்தாடை அணிவித்து, படையலுடன் வழிபாடு நடத்தியுள்ளனர்.

சென்னையில் ரயில் நிலையத்தில் பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த பள்ளி மாணவர்கள் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

ரயில் தண்டவாளங்களில் செல்ஃபி எடுப்போருக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

9,000 குதிரைத்திறன் சக்தி கொண்ட என்ஜின்களை உருவாக்கும் ஒரு சில நாடுகளில் இந்தியாவும் இடம் பிடித்திருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக இரு நாட்டு அதிபர்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தனித்தனியாக கடிதம் எழுதி உள்ளார்.

Must Read : மின்சாரத்துறை அமைச்சர் தொகுதியிலேயே மின்வெட்டு.. விவசாயிகள் புலம்பல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னர், பிருத்வி ஷா அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.

நடப்பாண்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ரஷ்யா, பெலாரஸ் நாட்டு வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மேற்கு இந்திய தீவுகள் அணி கேப்டன் பொல்லார்டு அறிவித்துள்ளார்.

First published:

Tags: Headlines, Today news, Top News