Home /News /tamil-nadu /

Headlines Today : அக்னி நட்சத்திரம் முதல் ஐபிஎல் கிரிக்கெட் வரை.. இன்றைய தலைப்புச் செய்திகள் (ஏப்ரல் 20-2022)

Headlines Today : அக்னி நட்சத்திரம் முதல் ஐபிஎல் கிரிக்கெட் வரை.. இன்றைய தலைப்புச் செய்திகள் (ஏப்ரல் 20-2022)

கத்திரி வெயில் மே 4ம் தேதி தொடங்கும்

கத்திரி வெயில் மே 4ம் தேதி தொடங்கும்

Headlines Today : தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும்நிலையில், அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4ம் தேதி தொடங்கி 25 நாட்களுக்கு நீடிக்கும் அக்னி வெயில், மே 28ம் தேதியன்று முடிவடையும் என மண்டல வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4ம் தேதி தொடங்கும் என, மண்டல வானிலை மையம் அறிவித்துள்ளது.

  அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் கட்டணமில்லா மாணவர் சேர்க்கைக்கு, இன்று முதல் விண்ணப்ப பதிவு துவங்க உள்ளது.

  அரசு ஊழியர்களுக்கு அடுத்த காலாண்டிற்கான வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 7.1 சதவீதம் ஆக இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

  சட்டப்பேரவை வளாகத்தில் தானும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் காரில் ஏற முயன்றதாக, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  மதுரையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ரயிலை தடுத்து நிறுத்திய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட, அனைவரையும் விடுவித்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  சென்னையில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணிக்கும் மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.

  சேலத்தில் ரேஷன் கடைகளில் பிரதமரின் புகைப்படத்தை வைக்க முயன்ற பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

  திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் திடீரென தீ பற்றி புகை மண்டலமாக காட்சியளித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

  திருப்பூரில் அரசுப் பள்ளியில் மதம் மாற்றும் முயற்சியில் ஆசிரியை ஈடுபடுவதாக கூறி, பெற்றோர் மற்றும் இந்து முன்னணியினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

  திமுக ஆட்சி தான் திராவிட மாடல் என்றும், புதிதாக யாரும் திராவிட ஆட்சி அமைக்க வேண்டிய அவசியமில்லை எனவும் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

  மதுரை மூன்று மாவடியிலிருந்து அழகர்கோவிலுக்கு புறப்பட்ட கள்ளழகரை லட்சக்கணக்கான மக்கள் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

  கடலூர் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசு பேருந்தின் பின்பக்க கண்ணாடியை ஐடிஐ மாணவர்கள் அடித்து உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

  விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே 7 டன் எடையுடைய தேரை பக்தர்கள் தோளில் சுமந்து வீதிஉலா சென்ற நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது.

  உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவத்திற்கான சர்வதேச மையத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

  கொரோனா பரவலை தடுக்க தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

  கப்பற்படையின் INS டெல்லி கப்பலில் இருந்து முதல் முறையாக, பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.

  புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு புதிய தலைமை செயலாளரை நியமித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

  ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை கட்டணமில்லாமல் காண தனி செயலியை உருவாக்கிய சிவகங்கை இளைஞரை கைது செய்துள்ளது ஹைதராபாத் போலீஸ்.

  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில், பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.

  இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்து அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார்.

  ரஜினியை சந்தித்த இயக்குனர் நெல்சன் ரஜினி திரைப்படத்தை இயக்குவதை உறுதி செய்துள்ளார்.

  இரண்டு மாதங்களை கடந்த உக்ரைன் உடனான போர் புதிய கட்டத்தை எட்டியுள்ளதாக, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் அறிவித்துள்ளார்.
  Published by:Suresh V
  First published:

  Tags: Headlines, Today news, Top News

  அடுத்த செய்தி