தமிழக சட்டப்பேரவையில் இன்று தொழில்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.
இந்த ஆண்டுக்கான மிஸ் கூவாகம் அழகிப் போட்டி நடைபெற்றது. இதில், சென்னையைச் சேர்ந்த மெகந்தி,
"மிஸ் கூவாகம்" ஆக தேர்வு செய்யப்பட்டார்.
கூவாகம் திருவிழாவில், திருநங்கைகள் கோயில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.
ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு செல்கிறார். அங்கே ஆளுநருக்கு எதிராக போராட்டம் அறிவிக்கப்பட்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டுள்ளது.
ஆளுநர் பங்கேற்ற அண்ணாமலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவை அமைச்சர்கள் புறக்கணித்தனர்.
திராவிட மாடல் வளர்ச்சியை ஒவ்வொரு பேரூராட்சியும் அடைய வேண்டும் என, பேரூராட்சி தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
நீட் விலக்கு மசோதா விவகாரத்தில், தேவைப்பட்டால் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
11 மாத கால திமுக ஆட்சியால் எந்த பயனும் இல்லை என எதிர்க்கட்சி தலைவர்
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் தினசரி
கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது
ஆம்வே இந்தியா நிறுவனத்தின் 757 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்.
இந்திய
பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவால் முதலீட்டாளர்கள் சுமார் மூன்றரை லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளார்.
இந்திய
ராணுவத்தின் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் யுஸ்வேந்தர் மாயாஜால பந்துவீச்சால் ராஜஸ்தான் அணி, த்ரில் வெற்றிபெற்றது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர்
மிச்செல் மார்ஷுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அந்த அணியின் அனைத்து வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
நவி மும்பையில் இன்று நடைபெறும் 31-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட் -
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி, இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இலங்கையில் மேலும் 3 அமைச்சர்களை அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்துள்ளார்.
Must Read : இந்த ஆண்டின் மிஸ் கூவாகமாக சென்னையைச் சேர்ந்த மெகந்தி தேர்வு (படங்கள்)
இலங்கையில் அரசுக்கு எதிராக
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டம்.
தங்களது நாட்டின் கிழக்குப் பகுதியில் தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளதாக
உக்ரைன் தெரிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.