தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு : என்னென்ன செயல்படும்? எவை செயல்படாது?

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

தமிழகத்தில் இன்று  முழு ஊரடங்கு : என்னென்ன செயல்படும்? எவை செயல்படாது?
  • Share this:
தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ஒரு நாளில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 7,000-ஐ நெருங்கியுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக ஜூலை மாதம் ஞாயிற்றுகிழமைகளில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

அதன்படி, நாளை தமிழகம் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும். நாளை, அத்தியாவசியப் பொருள்களுக்கான கடைகளும் திறப்பதற்கு அனுமதி கிடையாது. மருத்தகங்கள் மட்டும் நாளை திறந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் கடைகளுக்குத் தடை:


முழு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமையன்று காய்கறி, மளிகை கடை, இறைச்சிக்கடைகளும் செயல்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேவையின்றி பொதுமக்கள் வெளியே செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஓட்டல்கள், டீக்கடைகள் செயல்படாது. பெட்ரோல் பங்குகளும் செயல்படாது. அத்தியாவசியப் சேவைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்காக மிகச் சொற்பமான பெட்ரோல் பங்குகள் செயல்படும்.

எவை இயங்கும்:மருந்துக்கடைகள், மருத்துவமனைகள் நாளை வழக்கம்போல செயல்படும். பால்கடைகளுக்கு காலை நேரத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
First published: July 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading