முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை

கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை

மழை

மழை

TN Weather Update : நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (8.07.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை (ஜூலை 9) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

அவலாஞ்சி (நீலகிரி) 12, தேவலா (நீலகிரி) 10, மேல் பவானி ( நீலகிரி) 9, சின்னக்கல்லார் (கோவை) 8, நடுவட்டம் (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி), கூடலூர் பஜார் (நீலகிரி) தலா 6, மங்களாபுரம் (நாமக்கல்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), சோலையார் (கோவை) தலா 5, வால்பாறை PTO (கோவை) 4, ஏற்காடு (சேலம்) 3, சேலம், எமெராலட் (நீலகிரி), கோவை தெற்கு (கோவை) தலா 2,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கெட்டி (நீலகிரி), வேப்பூர் (கடலூர்), பெரியார் (தேனீ), திருப்பூர், பொள்ளாச்சி (கோவை), செய்யூர் (செங்கல்பட்டு), தனிஸ்பேட் (சேலம்), பேச்சிப்பாறை (கன்னியாகுமாரி), வீரபாண்டி (தேனீ), அவிநாசி (திருப்பூர்), செங்கம் (திருவண்ணாமலை), உதகமண்டலம் (நீலகிரி), அன்னுர் (கோவை), தேக்கடி (தேனீ), காங்கேயம் (திருப்பூர்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

இன்று முதல் ஜூலை 10 வரை, குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

Must Read : 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த புதிய வகை உயிரினம்... ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியம்

இன்று முதுல் வரும் 11ஆம் தேதி வரை, ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 12ஆம் தேதி வரை, கர்நாடகா கடலோரப்பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை ஆய்வுமையம் அறிவுறுத்தியுள்ளது.

First published:

Tags: Heavy rain, Meteorological Center, Rain Update, Weather News in Tamil