ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆயுத பூஜை கொண்டாட்டம் கோலாகலம்.. வீடுகள், நிறுவனங்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடு..!

ஆயுத பூஜை கொண்டாட்டம் கோலாகலம்.. வீடுகள், நிறுவனங்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடு..!

மாதிரி படம்

மாதிரி படம்

தங்கள் தொழிலுக்கும், படிப்புக்கும் உதவியாக இருக்கும் கருவிகளை அலங்கரித்து வழிபாடு நடத்துவர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India

  நாடு முழுவதும்  இன்று ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது.

  கல்விக்குரிய சரஸ்வதி, செல்வத்துக்குரிய லட்சுமி, வீரத்துக்குரிய பார்வதி போன்றோரை வணங்கக்கூடிய பண்டிகைதான் நவராத்திரி. இந்த பண்டிகையின் ஒன்பதாவது நாளில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. இதன்படி, தங்களது தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் பொருட்களை வைத்து இன்று பூஜை செய்யப்படுவது வழக்கம்.

  இதேபோல, கல்விக்கு உதவும் சரஸ்வதியை வழிபடும் வகையில், கல்வி உபகரணங்களை வைத்து பூஜை செய்யப்படுகிறது. இதன்படி, பொதுமக்கள் தங்களது வீடுகளில் வழிபாடு நடத்தி வருகின்றனர். இதேபோல, தொழில் நிறுவனங்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. தங்கள் தொழிலுக்கும், படிப்புக்கும் உதவியாக இருக்கும் கருவிகளை அலங்கரித்து வழிபாடு நடத்துவர். அவல், பொரி, சுண்டல், பழம் உள்ளிட்டவைகளை சாமிக்கு படைத்து ஆயுத பூஜை கொண்டாடப்படும்.

  இதையொட்டி, பொதுமக்களுக்கு தமிழக ஆளுநர் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தொழில் வளம் சிறக்கவும், கல்வி மேம்படவும் இந்த பூஜை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Ayudha poojai, Tamil Nadu