• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பேருந்துகளில் கஞ்சா கடத்துவதை தடுக்க, பயணிகளை பரிசோதிக்க வேண்டும் - போக்குவரத்துத்துறை உத்தரவு

பேருந்துகளில் கஞ்சா கடத்துவதை தடுக்க, பயணிகளை பரிசோதிக்க வேண்டும் - போக்குவரத்துத்துறை உத்தரவு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பேருந்துகளில் கஞ்சா மற்றும் போதை பொருள் கடத்துவதை தடுக்க பயணிகளின் உடைமைகளை பரிசோதித்து அனுமதிக்க போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
    இதுதொடர்பாக போக்குவரத்துறை வெளியிட்டு சுற்றறிக்கையில், பேருந்துகளின் இயக்கம் பிற மாநிலங்களிலிருந்து நமது மாநில போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் சட்டத்திற்கு விரோதமான கஞ்சா மற்றும் போதை பொருள் கடத்துவதாக தகவல் கிடைத்துள்ளது.

    எனவே, நமது கழக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் கழகப் பேருந்துகளில் பயணிகள் கொண்டு வரும் கைப்பைகள், சுமைகள் பார்சல் மற்றும் ஆளில்லாத பார்சல்கள் அனைத்தையும் பரிசோதித்து பின்பு பயணிக்க அனுமதிக்கவும், தணிக்கையாளர்கள் தணிக்கையின் போது இதனை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. பரிசோதிக்க தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் பொறுப்பாளர்கள்.

    எனவே வணிகம்/ இயக்க மேலாளர்கள் மற்றும் கிளை மேலாளர்கள் பேருந்து நிலைய பொறுப்பாளர்கள் தங்கள் கட்டுபாட்டில் உள்ள கிளைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் அனைத்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனவர்களும் அறியும் வண்ணம் மேற்கண்ட தகவல்களை சுற்றறிக்கை வாயிலாக தெரியப்படுத்தி விழிப்புடன் பணிபுரிய இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: