ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர்!

ஒரு முறை இரண்டரை மில்லியின் லிட்டர் தண்ணீர் கொண்டு வரமுடியும். எனவே ஒரு நாளைக்கு சுமார் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு கொண்டுவரப்படும்.

news18
Updated: June 25, 2019, 2:05 PM IST
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர்!
தண்ணீர் கொண்டுவரும் ரயில்
news18
Updated: June 25, 2019, 2:05 PM IST
சென்னையின் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க வேலூர் மாவட்டம்  ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட உள்ளது.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் ஜோலார்பேட்டைக்கு வரும் நீரை சென்னையின் தண்ணீர் தேவைக்கு பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சுமார் 65 கோடி ரூபாய் செலவில், ஒரு நாளைக்கு சுமார் 10 மில்லியன் தண்ணீர் கொண்டு வரப்பட உள்ளது. 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு குழாய் அமைத்து தண்ணீர் கொண்டுவரப்பட்டு, ரயில் நிலையத்தில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சேமிக்கப்படும்.

அந்த தொட்டியில் இருந்து ரயிலில் தண்ணீர் நிரப்பப்படும்.  ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் நான்கு முறை ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட உள்ளது.

ஒரு முறை இரண்டரை மில்லியின் லிட்டர் தண்ணீர் கொண்டு வரமுடியும். எனவே ஒரு நாளைக்கு சுமார் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு கொண்டுவரப்படும்.

Also see...

First published: June 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...