இலங்கை குண்டு வெடிப்பு விவகாரம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் விளக்கம்

குண்டு வெடிப்பு சம்பவத்தை எந்த அமைப்பினர் செய்திருந்தாலும் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் தீவிரவாதத்தை எதிர்க்கும் அமைப்பாகவும், மக்கள் நல சேவையில் ஈடுபடும் அமைப்பாகவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இருந்துவருகிறது.

இலங்கை குண்டு வெடிப்பு விவகாரம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் விளக்கம்
பாதுகாப்பு பணியில் ராணுவம்
  • News18
  • Last Updated: April 23, 2019, 9:09 PM IST
  • Share this:
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புக்கு காரணமாக கருதப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கும் தங்களது அமைப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநிலத் தலைவர் சம்சீர்லுகா உள்ளிட்டவர்கள் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர்.

அப்போது அவர்கள் ,’இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக ஒரு ஆங்கில நாளிதழிலில் செய்தி வெளியானது. அந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பின்னணியில் ஸ்ரீலங்கன் தவ்ஹீத் ஜமாத் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாத்தும் இருப்பதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்தச் செய்தியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வன்மையாகக் கண்டிக்கிறது.


குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பெயரைச் சேர்த்ததற்கு அந்த ஆங்கில நாளிதழ் மறுப்பு செய்தியும் வெளியிட்டிருந்தது. குண்டு வெடிப்பு சம்பவத்தை எந்த அமைப்பினர் செய்திருந்தாலும் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் தீவிரவாதத்தை எதிர்க்கும் அமைப்பாகவும், மக்கள் நல சேவையில் ஈடுபடும் அமைப்பாகவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இருந்துவருகிறது.

அதேபோல, எங்களுடைய கொள்கைகளை வெளிப்படுத்தும் அமைப்பாக ஸ்ரீலங்கன் தவ்ஹீத் ஜமாத் உள்ளது. இது இலங்கை அரசுக்கும் தெரியும். குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்ரீலங்கன் தவ்ஹீத் ஜமாத் தரப்பில் ரத்ததானம் செய்யப்பட்டது. ஆனால், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்று தெரிவித்தார்.

Also see:
First published: April 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்