ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னை டூ பம்பை.. சபரிமலை செல்வோருக்கு சிறப்பு பேருந்து.. போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு!

சென்னை டூ பம்பை.. சபரிமலை செல்வோருக்கு சிறப்பு பேருந்து.. போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு!

சபரிமலை பஸ்

சபரிமலை பஸ்

சென்னையில் இருந்து பம்பைக்கு பிற்பகல் 3.30 மணி மற்றும் 4 மணி என 2 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சபரிமலை செல்வோரின் வசதிக்காக சென்னை - பம்பை இடையே நவம்பர் 17ம் தேதி முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

  கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்தை காண தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம்.

  இந்நிலையில் பக்தர்களின் வசதி கருதி சென்னையில் இருந்து பம்பைக்கு நவம்பர் 17ம் தேதி முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

  அதன்படி, சென்னையில் இருந்து பம்பைக்கு பிற்பகல் 3.30 மணி மற்றும் 4 மணி என 2 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதில் பெரியவர்களுக்கு ரூ.1090, சிறியவர்களுக்கு ரூ.545 கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. இந்த அதிநவீன மிதவை சொகுசு பேருந்து சேவை வரும் ஜனவரி 18ம் தேதி வரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

  பேருந்து டிக்கெட்டுகளை, www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதே போல், சென்னையில் இருந்து குமுளிக்கு மாலை 5.30 மணிக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்தையும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரியவர்களுக்கு ரூ.575, சிறியவர்களுக்கு ரூ.288 கட்டணம் வசூலிக்கப்படும்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Sabarimala, Tamilnadu, TNSTC