2015-ம் ஆண்டு குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற அரசு உயர் அதிகாரிகளிடம் விசாரணை! சிக்குவார்களா அதிகாரிகள்

2015ஆம் ஆண்டு நடந்த குரூப்-1 தேர்வில் குறிப்பிட்ட 2 பயிற்சி மையங்களில் பயின்ற 60க்கும் அதிகமானோர் பணியில் சேர்ந்துள்ளனர் குரூப்-1 தேர்

2015-ம் ஆண்டு குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற அரசு உயர் அதிகாரிகளிடம் விசாரணை! சிக்குவார்களா அதிகாரிகள்
மாதிரிப்படம்
  • Share this:
2015-ம் ஆண்டு குரூப் 1 தேர்வு எழுதி பணியில் சேர்ந்தவர்களிடம் விரைவில் டிஎன்பிஎஸ்சி விசாரணை நடத்தவும்  வழக்கு பதிவு செய்ய  இருப்பதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு வணிகவரித்துறை ஆணையர், பஞ்சாயத்து துறை உதவி இயக்குநர், உதவி காவல் கண்காணிப்பாளர், உதவி ஆட்சியர் உள்ளிட்ட 74 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது.
குறிப்பிட்ட 2 பயிற்சி நிறுவனத்தில் இருந்து 60-க்கும் அதிகமானோர் தேர்சி பெற்றனர். இதில் முறைகேடு நடந்திருக்கக்கூடும் என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது .


இதுதொடர்பாக சி.பி.ஐ விசாரணை கோரி வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இதுதொடர்பான விசாரனையின் போது 2015-ம் ஆண்டு பணியில் சேர்ந்த அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பதில் அளித்துள்ளது.

2015-ம் ஆண்டு பணியில் சேர்ந்து தற்போது துணை ஆட்சியர் உதவி காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் இருக்கும் 60-க்கும் மேற்பட்ட அரசு உயர் அதிகாரிகளிடம் அரசு பணியாளர் தேர்வாணையம் விசாரணை நடத்தவும் வழக்கு பதிவு செய்ய  இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு பணியாளர் தேர்வாணையம் 60-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளும் என்று தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த விசாரனையில் பல அதிரடியான தகவல்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
First published: February 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்