டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுகளில் தமிழ் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதன் அடிப்படையிலான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.
டிசம்பர் 3, 2021 அன்று முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC )அறிவிக்கை செய்யப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் தமிழ் மொழித் தாள் கட்டாயமாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அன்றைய தினம் வெளியிடப்பட்ட தமிழக அரசின் அரசாணையில்,
(1) தமிழ் மொழித் தகுதித் தாள் (Qualifying Paper), தேர்வர்கள் அனைவருக்கும் கட்டாயமாக்கப்படுகிறது.
(2) தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்புத் தரத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
(3)மேற்கண்டவாறு நடத்தப்படும் கட்டாய தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி (Minimum Qualifying Marks) கட்டாயமாக்கப்படுகிறது. தகுதித் தாளில் தேர்ச்சி பெறாதவர்களின் இதர போட்டித் தேர்வுத்தாள் / தாட்கள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது.
இதையும் படிங்க : டிஎன்பிஎஸ்சி ஆண்டுத்திட்டம் 2022 வெளியீடு - குரூப் தேர்வுகள் முழு பட்டியல்
என்பது உள்ளிட்ட விதிகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. தமிழக அரசின் இந்த நடவடிக்கை மூலம் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அல்லது தமிழ் மொழியில் அடிப்படை புலமை இல்லாதவர்களால், தமிழக அரசுப் பணிகளில் சேர முடியாது என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ரெடியாக்கிட்டு இருக்கீங்களா.. உங்களுக்கான செய்தி இது
இருப்பினும், தமிழக அரசு வேலைகள் தமிழர்களுக்கு மட்டுமே கிடைக்க வழிவகை செய்யும் இந்த அரசாணைக்கு தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதையும் படிங்க : டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு.. 3,800 பேர் தேர்ச்சி
இதற்கிடையே புதிய அரசாணைப்படி டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள் மற்றும் பாடத் திட்டம் எவ்வாறு அமையும் என்ற கேள்வி அரசுத் தேர்வு ஆர்வலர்கள் மத்தியில் எழுந்து வந்தது. இந்த நிலையில், அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தேர்வு பணியாளர் ஆணையம் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில், புதிய பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
புதிய பாடத்திட்டம் - வினாத்தாள் லிங்க் இதோ...
தமிழ்தேர்வு கட்டாயம் அரசாணை அடிப்படையில் பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.