குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு!

குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு!
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: November 12, 2019, 9:08 PM IST
  • Share this:
செப்டம்பர் மாதம் நடைபெற்ற குரூப்-4 தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in , www.tnpscexams.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு மையம் சார்பில் கடந்த செப்டம்பர் குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. 6,491 காலி பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இந்தத் தேர்வை சுமார் 10 லட்சம் பேர் எழுதினர்.

பொதுவாக டி.என்.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு அதிக காலம் தேவைப்படும். ஆனால், இந்தமுறை தேர்வு நடைபெற்று 72 நாள்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு தேர்வு செய்யப்படுபவர்களின் பட்டியல் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in , www.tnpscexams.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.


First published: November 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...