முகப்பு /செய்தி /தமிழ்நாடு / குரூப் 4 தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும்? TNPSC தலைவர் தகவல்

குரூப் 4 தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும்? TNPSC தலைவர் தகவல்

TNPSC Group 4 குரூப்-4 காலிப்பணியிடம் 5000 இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கலந்தாய்வு முடிவு பெறும் வரை காலிப் பணியிடங்களை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

குரூப் 2 தேர்வுக்கு  (Group 2) Syllabus தயாரிப்பு பணி ஓரிரு தினங்களில் முடிவுபெறும் என்று தெரிவித்த டின்பிஎஸ்சி (TNPSC) தலைவர் பாலச்சந்திரன் குருப் 4 (Group 4)தேர்வுக்கான அட்டவணை இந்த மாத மத்தியில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், குரூப் 2 தேர்வுக்கு Syllabus தயாரிப்பு பணி ஓரிரு தினங்களில் முடிவுபெறும் என்று கூறினார்.  மேலும்,  மார்ச் மாதத்தின் மத்தியில் குரூப் 4 தேர்வுக்கான அட்டவணையை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குரூப்-4 காலிப்பணியிடம் 5000 இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கலந்தாய்வு முடிவு பெறும் வரை காலிப் பணியிடங்களை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் டிஎன்பிஎஸ்சி ஆணையம் மீது தேர்வர்களுக்கு நம்பகத் தன்மை அதிகரித்துள்ளது என்றும் கூறிய அவர், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு வினா மற்றும் விடைத்தாள்கள் கொண்டு செல்லும் வாகனங்களில் கேமராக்கள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனவே, வினாத்தாள் முன்கூட்டியே வெளியாக வாய்ப்பில்லை என்று உறுதிபட பாலச்சந்திரன் தெரிவித்தார். 

செய்தியாளர்- சிவமணி- நெல்லை

First published:

Tags: Group 2, Group Exams, TNPSC