நெல்லையில் தேர்வர்களை உள்ளே அனுமதிக்காத கல்லூரி நிர்வாகம் - 1 மணி நேரம் தாமதமாக தொடங்கிய குரூப் 4 தேர்வு

மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, கல்லூரி நிர்வாகத்திடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அதிகாரிகள் பேசினர்.

நெல்லையில் தேர்வர்களை உள்ளே அனுமதிக்காத கல்லூரி நிர்வாகம் - 1 மணி நேரம் தாமதமாக தொடங்கிய குரூப் 4 தேர்வு
News18Tamil
  • News18
  • Last Updated: September 1, 2019, 11:13 AM IST
  • Share this:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு , தமிழகம் முழுவதும் இன்று நடந்துவரும் நிலையில், நெல்லை அருகே ஒரு கல்லூரியில் தேர்வர்களை உள்ளே அனுமதிக்காததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர் , தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கும், கிராம நிர்வாக அலுவலகர் பணியிடங்களுக்குமான குரூப் 4 தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு நண்பகல் ஒரு மணி வரை நடைபெற உள்ளது. விஏஓ உள்ளிட்ட மொத்தம் 6 ஆயிரத்து 491 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.


பத்தாம் வகுப்பு தகுதியாகக் கொண்டு நடைபெறும் இந்த தேர்வில் 16 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்து தேர்வு எழுத உள்ளனர்.

தேர்வு மையத்துக்கு ஹால் டிக்கெட் மற்றும் பேனா மட்டுமே கொண்டு வர வேண்டும். மோதிரம், கைக்கடிகாரம், கால்குலேட்டர் உள்ளிட்ட எந்த ஒரு பொருளுக்கும் அனுமதி இல்லை என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், நெல்லை அருகே உள்ள மேலத்திடியூர் பி.எஸ்.என் பொறியியல் கல்லூயில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்வெழுத இருந்த நிலையில், இன்று காலை தேர்வர்கள் யாரையும் கல்லூரி நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை.

Loading...

இதனால், தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 10 மணிக்கு தேர்வுகள் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில், 10 மணியை தாண்டியும் தேர்வர்களை கல்லூரி நிர்வாகம் உள்ளே விடவில்லை.

இதனை அடுத்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, கல்லூரி நிர்வாகத்திடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அதிகாரிகள் பேசினர்.

இதனை அடுத்து 10.50 மணிக்கு தேர்வர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சுமார் 1 மணி நேரம் தாமதமாக தேர்வு தொடங்கியது.

எதற்காக கல்லூரி நிர்வாகம் தேர்வர்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்று இதுவரை தெரியவில்லை. அரசு நிர்வாகத்திற்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் இடையே சரியான புரிதல் இல்லாததால் தேர்வர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.



 
First published: September 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
Listen to the latest songs, only on JioSaavn.com