கொரோனா பரவல் காரணமாக 2020, 2021 ஆம் ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது அதற்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2022-ம் ஆண்டிற்கான பணி நியமனங்கள், போட்டித்தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த திட்ட அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. 2022-ம் ஆண்டு 32-க்கும் அதிகமான தேர்வுகள் நடந்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் அரசுவேலையில் 11000 -க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்ப வாய்ப்புள்ளது. குரூப் 2 ஏ-வில் மொத்தம் 5831 காலிப்பணியிடங்களும், குரூப் 4-ல் 5,244 காலிப்பணியிடங்களும் உள்ளது. தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியான பிறகும் கூட இந்த காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ- தேர்வுக்கான அறிவிப்புகள் பிப்ரவரி 2022-ல் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. விஏஓ மற்றும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்புகள் வெளியான அடுத்த 75 நாள்களில் தேர்வுகள் நடத்தப்படும். குரூப் 4 தேர்வு எழுதுபவர்கள் தமிழ்மொழி தேர்வில் கட்டாயம் 40 மதிப்பெண்கள் பெற வேண்டுமாம். கொரோனா பரவல் காரணமாக 2020, 2021ஆம் ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது அதற்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
Must Read : சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் ரூ.1000 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு - வருமானவரித்துறை தகவல்
தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என டிஎன்பிஎஸ்சி தலைவர் கூறியுள்ளார். தேர்வு எழுதும் மாணவர்கள் ஓஎம்ஆர் விடைத்தாள்களில் கருப்பு மை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.. விடைத்தாள்களை எடுத்து வரும் லாரிகளை ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.