தமிழில் எழுத தெரியாதவர்கள் பணிக்கு வரக் கூடாது என்ற நோக்கத்தில் தேர்வு முறையில் திருத்தம் - டி.என்.பி.எஸ்.சி

தமிழில் எழுத தெரியாதவர்கள் பணிக்கு வரக் கூடாது என்ற நோக்கத்தில் தேர்வு முறையில் திருத்தம் - டி.என்.பி.எஸ்.சி
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: September 29, 2019, 3:36 PM IST
  • Share this:
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையால் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு நன்மை தான் ஏற்படும் என்றும்; கிராமப்புற மாணவர்களும் பாதிக்காத வண்ணம் தேர்வு இருக்கும் எனவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுவின் செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

அண்மையில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனை தொடர்ந்து சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் அதன் செயலாளர்கள் சுதன் மற்றும் நந்தகுமார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், புதியதாக மாற்றப்பட்டுள்ள குரூப் 2 பாடத்தினால் கிராம புற மாணவர்கள் மற்றும் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும், நன்மை தான் ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.


தொடர்ந்து பேசியபோது, தமிழ் கேள்விகள் நீக்கப்படவில்லை எனவும், கொள்குறிப்பு வழியாக கேட்கப்பட்ட தமிழ் கேள்விகள், எழுத்து தேர்வாக விளக்கமாக எழுத வேண்டும் என்கிற வகையில் தான் புதிய முறை கொண்டு வரப்படுகிறது என்று கூறினர். மேலும் இதன் மூலம் தமிழில் எழுத தெரியாதவர்கள் பணிக்கு வர கூடாது என்கிற நோக்கில் தான் இம்முறை கொண்டு வரப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழை புறக்கணித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்ற அவர், குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் தமிழக வரலாறு பண்பாடு சேர்க்கப்பட்டுள்ளது, திருக்குறளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

டி.என்.பி.எஸ்.சி.யின் இந்த புதிய திட்டம் தமிழே தெரியாதவர்களுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும். கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் கூறினர். அதேபோல் புதிய பாடத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் தேர்வு எழுதக்கூடியவர்கள் தேர்வு எழுத தயாராவதற்கு போதுமான கால அவகாசம் வழங்கப்படும் என்றனர்.அதேபோல் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் கேள்விகள் தவறாக வருவதை குறைக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று கூறிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன், குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் தவறு இருந்தது குறித்து வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே குழு அளிக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் அந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் கேள்விகள் தயார் செய்யப்படும் நடவடிக்கை அனைத்தும் ரகசியமாக மேற்கொள்ளப்படும் எனவும், கேள்விகள் அச்சிடப்பட்டு அதன் பின் கவரில் வைத்து சீல் வைத்ததும், தேர்வு அறையில் மாணவர்கள் அதனை பிரிக்கும் போது தான் கேள்விகள் தவறா? என்பது தெரிய வரும் எனக் கூறினார்.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான டி.என்.பி.எஸ்.சி வேலை வாய்ப்பு குறித்து ஏற்கனவே கால அட்டவணை போடப்பட்டுள்ளது. எனவே அடுத்த ஆண்டிற்கு அட்டவணை போடப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்த அவர், டி.என்.பி.எஸ்.சி தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெறாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், இதுவரை அதுபோன்று நடந்தது இல்லை என்றும் தெரிவித்தனர்.

First published: September 29, 2019, 3:36 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading