ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

TNPSC Group 1 : 9 மணிக்கு முன் வராவிட்டால் தேர்வு எழுத முடியாது - குரூப்-1 தேர்வர்களுக்கு அலெர்ட்

TNPSC Group 1 : 9 மணிக்கு முன் வராவிட்டால் தேர்வு எழுத முடியாது - குரூப்-1 தேர்வர்களுக்கு அலெர்ட்

TNPSC

TNPSC

தேர்வர்கள் காலை 9 மணிக்கு முன் தேர்வறைக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலைத்தேர்வு நடைபெற உள்ளது.

  டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு தமிழ்நாடு தேர்வாணையத்தால் நடத்தப்படும் அரசு தேர்வாகும். துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர், உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் முதலிய பணிகளுக்காக நடத்தப்படுகிறது.

  இத்தேர்வு மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதற்கு தயாராவதற்கு 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிப்பாடப் புத்தகங்களை படித்தாலே போதுமானது.

  சுமார் 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு, கடந்த அக்டோபர் 30-ம் தேதி நடைபெறவிருந்தது. நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்ட இத்தேர்வு இன்று நடைபெறுகிறது.

  இந்தத் தேர்வில் பங்கேற்க 3, 22,414 பேர் விண்ணப்பித்துள்ளனர். 200 மதிப்பெண்களுக்கு விடைகளை தேர்ந்தெடுத்து எழுதக்கூடிய கொள்குறி முறையில் தேர்வு நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு 12.30 மணி வரை நடைபெற உள்ளது.

  Also see... இன்று விடுமுறை கிடையாது... அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் இயங்கும்...

  தேர்வர்கள் காலை 9 மணிக்கு முன் தேர்வறைக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 9 மணிக்குப் பிறகு தேர்வறைக்கு வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Group 1, Group Exams, Tamil Nadu