Home /News /tamil-nadu /

குரூப் 4, குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு ஏன் தாமதம்? TNPSC விளக்கம்

குரூப் 4, குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு ஏன் தாமதம்? TNPSC விளக்கம்

தகுதித் தேர்வாக தமிழ் மொழி பாடத்தை ஏற்படுத்தும் போது, ஓ.சி. பிரிவில் தேர்வு எழுதுவோர் பெரும் சிரமத்தை எதிர்கொள்ளலாம்.

தகுதித் தேர்வாக தமிழ் மொழி பாடத்தை ஏற்படுத்தும் போது, ஓ.சி. பிரிவில் தேர்வு எழுதுவோர் பெரும் சிரமத்தை எதிர்கொள்ளலாம்.

தகுதித் தேர்வாக தமிழ் மொழி பாடத்தை ஏற்படுத்தும் போது, ஓ.சி. பிரிவில் தேர்வு எழுதுவோர் பெரும் சிரமத்தை எதிர்கொள்ளலாம்.

    டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வர்கள் மிகவும் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், அறிவிப்பு வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டு வரும் நிலையில், எதற்காக இந்த தாமதம் என்பது குறித்த புதிய தகவல்கள் வெளி வந்துள்ளன.

    அனைத்து விதமான அரசுத் தேர்வுகளுக்கும் தமிழ் மொழி பாடத்தை தகுதித் தேர்வாக நடத்த டி.என்.பி.எஸ்.சி. திட்டமிட்டுள்ளது. தமிழ் இலக்கியம், வரலாறு, பண்பாடு தொடர்பான பாடத்திட்டம் இந்த தேர்வில் அமையலாம்.

    டி.என்.பி.எஸ்.சி தேர்வை பொருத்தவரையில், பிற மாநிலத்தவர்களும் எழுத விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு இட ஒதுக்கீடு சலுகை ஏதும் வழங்கப்படாது. பிற மாநிலத்தவர் Open Category (OC )பிரிவில் போட்டியிடுவார்கள். இனி, தகுதித் தேர்வாக தமிழ் மொழி பாடத்தை ஏற்படுத்தும் போது, ஓ.சி. பிரிவில் தேர்வு எழுதுவோர் பெரும் சிரமத்தை எதிர்கொள்ளலாம்.

    தமிழ் மொழி தகுதித் தேர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்ட பின்னர் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுக்கான அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குரூப் 4 பணிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. ஆனால் குரூப் 1, குரூப் 2 நிலையிலான பணிகளுக்கு எழுத்துத் தேர்வுடன், நேர்முகத் தேர்வும் நடத்தப்படுகிறது இந்நிலையில், தமிழ்நாடு அரசும் குரூப் 2 பணிகளுக்கு நேர்முகத் தேர்வை நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

    வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர், நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அதிகாரி, சார் பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர் உள்ளிட்ட காலிப் பணிகள் குரூப் 2 தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன.

     
    Published by:Musthak
    First published:

    Tags: Group 2, Group 4, TNPSC

    அடுத்த செய்தி