Home /News /tamil-nadu /

குரூப்-2 தேர்வு அறையில் செல்போன் பயன்படுத்தியவர் வெளியேற்றம்... போலீசார் தொடர் விசாரணை

குரூப்-2 தேர்வு அறையில் செல்போன் பயன்படுத்தியவர் வெளியேற்றம்... போலீசார் தொடர் விசாரணை

TNPSC Exam (மாதிரி படம் )

TNPSC Exam (மாதிரி படம் )

TNPSC Exam | குரூப் 2 தேர்வு அறையில் செல்போன் வைத்திருந்த மாணவரை ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் கண்டுபிடித்ததால் தேர்வு அறையில் இருந்து தேர்வு எழுதாமல் போலீசார்களால் வெளியேற்றப்பட்டார்.

    பரமக்குடியில் குரூப் 2 தேர்வு அறையில் செல்போன் வைத்திருந்த தேர்வர் போலிசாரால் வெளியேற்றப்பட்டார்.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சௌராஷ்ட்ரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குரூப் 2 தேர்வில் 20 மாணவர்களுக்கு ஒரு தேர்வு அறை வீதம், 30 தேர்வு அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் 600 மாணவர்கள் தேர்வு எழுத போலீசார்கள் பாதுகாப்புடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இங்கு நடைபெற்ற தேர்வில் 64 பேர் தேர்வு எழுத வரவே இல்லை.

    தொடர்ந்து நடைபெற்ற தேர்வில் பங்கேற்ற நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் (31) என்பவர் தேர்வு எழுதும் போது தன்னுடன் தடை செய்யப்பட்ட செல்போனை மறைத்து வைத்திருந்துள்ளார். இதனை ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் கண்டுபிடித்ததால் தேர்வு அறையில் இருந்து தேர்வு எழுதாமல் போலீசார்களால் வெளியேற்றப்பட்டார். வேறு ஏதேனும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து செல்போனை ஆய்வு செய்துவரும் போலீசார்கள் மேலும் தொடர் விசாரணை செய்து வருகின்றனர்.

    செய்தியாளர்: கு.தமிழ்ச்செல்வன் 
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Group 2, TNPSC

    அடுத்த செய்தி