கொரோனா பாதிப்பால் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விசாரணையில் பின்னடைவு

கொரோனா பாதிப்பின் காரணமாக டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு தொடர்பான விசாரணை தாமதமாகிறது என்று சி.பி.சி.ஐ.டி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விசாரணையில் பின்னடைவு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (கோப்புப்படம்)
  • Share this:
கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் மையங்களில் தேர்வு எழுதிய நபர்கள் முதல் 100 இடங்களில் 40-க்கும் அதிகமானோர் முன்னிலை பெற்றனர்.

குறிப்பிட்ட இரண்டு மையங்களில் தேர்வு எழுதிய நபர்கள் முதல் 100 இடங்களுக்குள் வந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து இதுகுறித்து விசாரித்த அரசுப் பணியாளர் தேர்வாணையம் முறைகேடுகள் நடந்திருப்பதை உறுதி செய்ததுடன் காவல்துறையில் புகார் அளித்தது. புகாரைத் தொடர்ந்து வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து முறைகேடுகளில் தொடர்புடைய தரகர் ஜெயக்குமார் டி.என்.பி.எஸ்.சி அலுவலக உதவியாளர் ஓம் காந்தன் உள்ளிட்ட 47 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வு மட்டுமல்லாது  2017 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப்-2 ஏ தேர்வு 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற வி.ஏ.ஒ தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 47  நபர்களும் வி.ஏ.ஓ, குரூப் 2ஏ, குரூப் 4 ஆகிய மூன்று தேர்வுகளிலும் நடைபெற்ற முறைகேடுகளோடு தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் மாதம் வரை பரபரப்பாக பேசப்பட்ட இந்த விவகாரம் கொரோனா காரணமாக அமைதியாகி போனது. இடைப்பட்ட காலத்தில் முறைகேட்டில் தொடர்புடைய சில நபர்கள் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தனர். இருப்பினும் இந்த வழக்கோடு தொடர்புடைய யாருக்கும் நீதிமன்றம்  ஜாமீன் வழங்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் கொரோனா காரணமாக தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் சாட்சிகளை விசாரிக்க இயலவில்லை என்றும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது வழக்கு தொடர்பான விசாரனை விபரங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
First published: June 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading