முகப்பு /செய்தி /தமிழ்நாடு / TNPSC : இணையத்தில் பரவுவது போலியான பட்டியல்... தேர்வாணையம் விளக்கம்..!

TNPSC : இணையத்தில் பரவுவது போலியான பட்டியல்... தேர்வாணையம் விளக்கம்..!

சமூக வலைதளங்களில் பரவி வருவது போலியான பட்டியல்

சமூக வலைதளங்களில் பரவி வருவது போலியான பட்டியல்

சமூக வலைதளங்களில் பரவி வருவது போலியான பட்டியல்

  • Last Updated :
  • Chennai, India

டிஎன்பிஎஸ்சி பொறியியல் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை எனவும் இணையத்தில் பரவுவது போலியான பட்டியல் எனவும் TNPSC தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்காக கடந்த ஜூலை மாதம் 2-ம் தேதி நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை எனவும், சமூக வலைதளங்களில் பரவி வருவது போலியான பட்டியல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொள்ள வேண்டாம் என தேர்வர்களுக்கு அறிவுறுத்தியுள்ள டிஎன்பிஎஸ்சி, தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnpsc.gov.in/ மட்டுமே முடிவுகள் வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளது.

தவறான தகவலை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

top videos
    First published:

    Tags: Competitive Exams, TNPSC