குரூப் 2 தேர்வில் தமிழ் பாடம் நீக்கப்பட்டதற்கு டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்
குரூப்-2 மெயின் தேர்வில் மொழிப்பாடங்கள் தொடரும் எனவும், அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் டி.என்.பி.எஸ்.சி. விளக்கமளித்துள்ளது.

கோப்புப் படம்
- News18 Tamil
- Last Updated: September 28, 2019, 8:16 PM IST
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் தமிழ் பாடம் நீக்கப்பட்டதற்கு தமிழகத்தில் அதிகமாக எதிர்ப்புக்குரல் எழுந்துள்ளது. தமிழ் தெரியாதவர்கள் மெயின் தேர்வை எழுத முடியாது என டி.என்.பி.எஸ்.சி. விளக்கமளித்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 முதல் நிலை தேர்வு 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. குரூப் 2 ஏ பிரிவில் முதல் நிலைத் தேர்வு மட்டும் எழுதினால் போதும் என்ற நிலை இருந்தது. முதல் நிலைத் தேர்வில் வழக்கமாக 100 கேள்விகள் தமிழ் அல்லது ஆங்கில மொழிப் பாடங்களில் இருந்தும், 100 கேள்விகள் பொது அறிவு பிரிவில் இருந்தும் கேட்கப்பட்டு வந்தது.
மெயின் தேர்வு முழுக்க முழுக்க பொதுப்பாடமாக இருந்தது. மாற்றப்பட்ட பாடத் திட்டத்திலும் 300 மதிப்பெண்கள் தொடர்கிறது. குரூப்-2 ஏ தேர்வு முறை முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. இனி முதல் நிலைத் தேர்வில் மொழிப்பாடங்கள் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.இனி முதல் நிலைத் தேர்வில் பட்டப் படிப்பு தரத்தில் 175 கேள்விகள் பொது அறிவு பிரிவில் இருந்தும், 25 கேள்விகள் 10-ஆம் வகுப்பு தரத்தில் திறனறிவு மனக்கணக்கு நுண்ணறிவு வகைகளில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நிலை தேர்வின் இரு அலகுகளில் தமிழ் கேள்வி இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், குரூப்-2 மெயின் தேர்வில் மொழிப்பாடங்கள் தொடரும் எனவும், அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் டி.என்.பி.எஸ்.சி. விளக்கமளித்துள்ளது. திருக்குறள், சுயமரியாதை, திராவிட இயக்கம் குறித்த பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது,
'அ' பிரிவில் தமிழில் இருந்து ஆங்கிலம், ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மொழிபெயர்ப்பில் குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் எடுக்காவிட்டால் அடுத்த பிரிவு திருத்தப்படாது. இதன்மூலம் தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே குரூப்-2 தேர்வு எழுத முடியும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. என்.பி.எஸ்.சி.யின் முடிவு தமிழக மாணவர்களுக்கு சாதகமானதாக இருக்கும் என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதிய பாடத்திட்டத்தை திரும்ப பெறாவிட்டால் தமிழக இளைஞர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்நிலைத் தேர்வில் தமிழ் பாடத்தை நீக்கி இருப்பதன் மூலம், தமிழே தெரியாத ஒருவர் மாநில அரசு பணியில் சேருவதற்கு வழிவகை செய்யப்பட்டிருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாடியுள்ளார்.
வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தமிழ் மொழிப்பாடமோ, ஆங்கில மொழிப்படமோ கடினம் என்பதால், அதனை தேர்வில் இருந்து தூக்கிவிட்டதாக வேல்முருகன் சாடியுள்ளார். தமிழை நீக்கியது அநியாயம் என்றும் இந்த முடிவை திரும்ப பெற வேண்டும் எனவும் நாஞ்சில் சம்பத் கோரியுள்ளார்.
தமிழகத்தில் 1 கோடி பேர் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் போது இந்த முடிவை எந்த வகையிலும் ஏற்க முடியாது என எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார். குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் தமிழ்ப்பாடம் நீக்கப்பட்டது பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
Also Watch

Loading...