ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஓ.எம்.ஆர் ஷீட்களில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் என்ன? டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் விளக்கம்

ஓ.எம்.ஆர் ஷீட்களில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் என்ன? டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் விளக்கம்

கோப்பு படம்

கோப்பு படம்

யாராவது வழியிலேயே ஓ.எம்.ஆர் ஷீட்டுகளை மாற்ற முடியாத படி, ஓ.எம்.ஆர் ஷீட் மாற்றியமைக்கப்படும் என்று தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளியில் உள்ள குரூப்-1 தேர்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு தேர்வாளர் பணி ஆணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘தமிழக அரசின் முதன்மையான தேர்வான டி.என்.பி.எஸ்.சி 05-04-20 நடத்தப்பட வேண்டிய தேர்வு கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்டு தேர்வு இன்று முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 856 மையங்களில் நடந்து வருகிறது. இத்தேர்வுக்கு 2,56,000 பேர் பதிவு செய்துள்ளனர். நேற்று முன் தினம் வரை 1,61,000 ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

கொரோனா காரணமாக 856 மையங்களில் சானிடைசர், உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்படுகிறது. தேர்வர்கள் யாருக்காவது உடல் வெப்பத்தில் மாற்றம் இருந்தால், அவர்கள் தனியாக தேர்வு எழுத ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் 2 ஹால்கள் தனியாக ஒதுக்கப்பட்டு அங்கு தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

856 மையங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் மூலம் உள்ளாட்சி துறை மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகளை முழுமையாக அறிந்து அதன் அடிப்படையில் ஓ.எம்.ஆர் ஷீட்டுகளில் பல்வேறு புதிய முறைகள் புகுத்தப்பட்டுள்ளது.

இத்தேர்வு எழுதப்படும் போது தேர்வர்களின் விவரங்கள் அடங்கிய தொகுப்பானது தேர்வு மையங்களிலேயே தனியாக பிரிக்கப்பட்டு, தேர்வு விடைத்தாள் மட்டுமே தனியாக வேறொரு கவர்களில் வைக்கப்படும். யாராவது வழியிலேயே ஓ.எம்.ஆர் ஷீட்டுகளை மாற்ற முடியாத படி, ஓ.எம்.ஆர் ஷீட் மாற்றியமைக்கப்படும். இதற்கு முன்னர் ஓ.எம்.ஆர் ஷீட்களின் பட்டியலின் மேற்பகுதியில் உள்ள விவரங்கள் ஷீட்களின் ஓரப்பகுதியில் கொண்டு வரப்பட்டு, அதை கிழித்து வைக்கும்படி செய்யப்பட்டுள்ளது.

தேர்வர்கள் எழுதி முடிக்கப்பட்ட பிறகு, எத்தனை ஏ, பி, சி, டி என்ற விவரத்தை அந்த தேர்வர்கள் முன்னியிலேயே சரிபார்த்து கண்காணிப்பு அலுவலர்கள் கையெழுத்திடும் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம், அழிகின்ற மையினால் தேர்வை எழுதிவிட்டு, வழியிலேயே அந்த மையை புதிதாக மாற்ற முடியாது. கருப்பு பேனாவால் மட்டுமே எழுத வேண்டும் என்ற நடைமுறையையும் கொண்டு வந்துள்ளோம்.

கூடுதலாக 1.15 வரை கால அவகாசம் வழங்கி, தேர்வர்களும், கண்காணிப்பு அலுவலர்களும் சரிபார்த்து சில விவரங்களை கொடுக்க வழங்கி உள்ளோம்.

தவிர, கேள்விகள் தவறு என்கிற பட்சத்தில் புதிதாக E என்ற குறிப்பை கருமையாக்கினால் முழு மதிப்பெண் வழங்கும் வகையிலும், 200 கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும் போன்ற புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளோம். ஓ.எம்.ஆர் தான் பல்வேறு முறைகேடுகளுக்கு காரணமாக இருப்பதால், தேர்வர்களின் கட்ட விரல் ரேகை பெறப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு தேர்வர்களுக்கும் வெவ்வேறு விதமான சீரியல் எண் கொண்ட கேள்வி தாள்கள் வழங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Group 1, TNPSC