குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு விவகாரம்! கைது நடவடிக்கையைத் தொடரும் சி.பி.சி.ஐ.டி

குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு விவகாரம்! கைது நடவடிக்கையைத் தொடரும் சி.பி.சி.ஐ.டி
மாதிரிப் படம்
  • Share this:
டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முறைகேட்டைத் தொடர்ந்து குரூப் - 2 ஏ தேர்வு முறைகேட்டிலும் கைது நடவடிக்கை தொடர்கிறது. தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி குரூப் - 2 ஏ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு வேலை வாங்கித் தந்ததாக தேடப்படும் தலைமைக் காவலர் சித்தாண்டி மீது 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்துள்ளது. கூட்டுச்சதி, போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சித்தாண்டி மூலம் முறைகேடு செய்து பணியில் சேர்ந்ததாக அவரது அண்ணன் வேல்முருகனும், ஜெயராணியும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்துக் கழகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் சுதாராணி என்பவரும், சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறையில் பணியற்றி வரும் விக்னேஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இவர்கள் குரூப் - 2 ஏ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு பணியில் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இதில் சுதாராணி, குரூப் - 4 முறைகேட்டில் தேடப்படும் இடைத்தரகர் ஜெயக்குமாரின் வாகன ஓட்டுநர் சம்பத்தின் மனைவி ஆவார். ஜெயக்குமார் தலைமறைவாக இருந்து வரும் நிலையில் அவர் அரசு வேலை வாங்கித் தருவதாக சுமார் 100 பேரிடம் 5 கோடி ரூபாய் வரை பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. குரூப் - 4 தேர்வு முறைகேட்டில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிக்கும் தொடர்பு இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

டிஎன்பிஎஸ்சியில் பணிபுரியும் மாணிக்கவேலும், ஓம்காந்தனும் ஏற்கெனவே கைதாகியுள்ள நிலையில், அவர்கள் இருவரையும் தேர்வின்போது ராமநாதபுரத்தில் பணி அமர்த்திய அதிகாரி யார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. விடைத்தாளைத் திருடி முறைகேட்டில் ஈடுபட இருவரும் திட்டமிட்டதாக கூறிய நிலையில் அதற்கு உதவி செய்யும் விதத்தில் இருவரையும் ஒரே இடத்தில் அந்த அதிகாரி பணி அமர்த்தினாரா என்றும் சிபிசிஐடி விசாரிக்கும் என தகவல்கள் வெளியாகியள்ளன.

Also see:

 
First published: February 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்