பெரியார் பெயருடன் சாதிப்பெயர் - மன்னிப்பு கேட்டது டி.என்.பி.எஸ்.சி!

டி.என்.பி.எஸ்.சி.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 2 தேர்வில் ஒரு கேள்வியில் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்று குறிப்பிட்டுள்ளது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மன்னிப்பு கோரியுள்ள்து.

  • News18
  • Last Updated :
  • Share this:
குரூப் 2 வினாத் தாளில் தந்தை பெரியாரின் பெயர், அவரது சாதி அடையாளத்துடன் குறிப்பிடப்பட்டு இருந்த விவகாரத்தில் டி.என்.பி.எஸ்.சி. மன்னிப்பு கேட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 2 தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வு வினாத்தாளில் திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார் என்ற கேள்விக்கு, கீழே ஈ.வெ.ராமசாமி நாயக்கர், ராஜாஜி, காந்திஜி என ஆப்ஷன்ஸ் கொடுக்கப்பட்டு இருந்தது. இதுதான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 1928-ம் ஆண்டிலேயே தனது பெயரில் ஒட்டியிருந்த சாதியை நீக்கியவர் பெரியார் என குறிப்பிட்டுள்ளார். சாதிப்பட்டம் போடக்கூடாது என்றவருக்கு சாதி அடையாளம் சூட்டி கேள்வி கேட்டிருப்பது அயோக்கியத்தனமானது மட்டுமன்றி, தேர்வு எழுதுவோரின் மனதில் பிற்போக்குத் தனமான எண்ணத்தை விதைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கு காரணமானவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டுமென்றும், தமிழ்நாடு அரசு பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இந்த விவகாரத்திற்கு மன்னிப்பு கோரியுள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், வினாத்தாள் தயாரிப்பில் தவறு ஏற்பட்டுவிட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளது. குரூப் 1, குரூப் 2 தேர்வுகளுக்கு வினாத்தாள் தயாரிப்பில் ஈடுபட்டுவந்த மாநிலக் கல்லூரி அந்தப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. வருத்தம் தெரிவித்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்த விவகாரத்தை உடனடியாக சுட்டிக்காட்டி கண்டித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published: