முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மார்ச் இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மார்ச் இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முடிவுகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முடிவுகள்

TNPSC Group 4 Result | தேர்வின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று மீண்டும் தேர்வர்களின் கனிவான தகவலுக்காக தெரிவிக்கப்படுகிறது - டிஎன்பிஎஸ்சி

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாகும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு -iv (தொகுதி - IV) இல் அடங்கிய பணிகளுக்கான தேர்வினை கடந்த 24.07.2022 அன்று நடத்தியது.

இத்தேர்வின் முடிவுகள் குறித்து தேர்வாணையத்தால் 14.02.2023 அன்று வெளியிடப்பட்ட விரிவான செய்திக்குறிப்பில் தெரிவித்ததன்படி தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகள் தற்போது தேர்வாணையத்தில் துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும், தகவலுக்காகத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இத்தேர்வின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று மீண்டும் தேர்வர்களின் கனிவான தகவலுக்காக தெரிவிக்கப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளனர்.

First published:

Tags: Exam results, Group 4, TNPSC