• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பூமியைப் பாதுகாப்பாக அடுத்த தலைமுறைக்குக் கொடுப்பது கடமை... நடிகர் சூர்யா!

பூமியைப் பாதுகாப்பாக அடுத்த தலைமுறைக்குக் கொடுப்பது கடமை... நடிகர் சூர்யா!

நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூக அக்கறையிலும் ஈடுபாடு கொண்ட சூர்யா, 2008-ம் ஆண்டு அகரம் பவுன்டேஷன்ஸ் எனும் பெயரில் தொண்டு அமைப்பு ஒன்றை தொடங்கி அதன்மூலம் ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கல்வி செலவை ஏற்று வருகிறார்.

நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூக அக்கறையிலும் ஈடுபாடு கொண்ட சூர்யா, 2008-ம் ஆண்டு அகரம் பவுன்டேஷன்ஸ் எனும் பெயரில் தொண்டு அமைப்பு ஒன்றை தொடங்கி அதன்மூலம் ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கல்வி செலவை ஏற்று வருகிறார்.

நடிகர் சூர்யா நடிப்பில் புதிய ப்ளாஸ்டிக் தடை விழிப்புணர்வு விளம்பரப்படம் ஒன்றை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    நடிகர் சூர்யா நடிப்பில் ப்ளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு விளம்பரப் படம் ஒன்றை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தயாரித்து வெளியிட்டுள்ளது.

    தமிழக அரசு இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியக் கூடிய 14வகையான ப்ளாஸ்டிக் பொருட்களின் உற்பத்திக்கும் பயன்பாட்டிற்கும் தடை விதித்து உத்தரவிட்டது.



    சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திரை பிரபலங்களான ராம்கி, விவேக், வரலட்சுமி ஆகியோரைக் கொண்டு பல விளம்பரப் படங்களை தயாரித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.



    அந்த வரிசையில் நடிகர் சூர்யா நடிப்பில் புதிய ப்ளாஸ்டிக் தடை விழிப்புணர்வு விளம்பரப்படம் ஒன்றை இன்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.



    இந்த விளம்பரப்படத்தில் ப்ளாஸ்டிக் பயன்பாடு எத்தகைய பிரச்னைகளை சுற்றுச்சூழலுக்கும் உயிரினங்களுக்கும் ஏற்படுத்தும் என பள்ளி சிறுவர்களுக்கு கற்றுக் கொடுக்கும்படி நடிகர் சூர்யா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: