கடந்த ஆட்சியில் மருத்துவர்களுக்கான செலவில் முறைகேடு: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அம்பலம்!

மாதிரிப் படம்

கொரோனா முதல் அலையில் மருத்துவர் தங்குவதற்கு ஆயிரத்து 900 ரூபாய் வாடகையும்,  மூன்று வேளை உணவிற்கு 600 ரூபாய் என ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் செலவு செய்யப்பட்டது.  தற்போது, அதே தரமான உணவு மற்றும் தங்குமிடத்திற்கு சேர்த்து மொத்தம் ஆயிரத்து 450 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது.

  • Share this:
கொரோனா வார்டுகளில் பணிபுரிந்த மருத்துவர்களை தனியார் விடுதிகளில் தங்க வைத்து அவர்களுக்கு உணவுகள் வழங்கியதில் மட்டும், அதிமுக ஆட்சியில் 100 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில், நெல்லை மாவட்டத்தில் மட்டும் இரண்டரை கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அம்பலமாகியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கொரோனா முதல் அலையின் போது, சிறப்பு வார்டுகளில் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர் உட்பட சுகாதார பணியாளர்கள், தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். அத்துடன், அவர்களுக்கு மூன்று வேளையும் பிரபல ஓட்டல்களில் இருந்து தரமான உணவுகள் வரவழைக்கப்பட்டு வழங்கப்பட்டன.

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் மருத்துவர்கள் தங்கியதற்கும், அவர்களுக்கு உணவு வழங்கியதிலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் படிக்க:  சென்னை முழுவதும் அதிநவீன ANPR கேமராக்கள் பொருத்தப்படும்: காவல் ஆணையர்..


நெல்லை மாவட்டத்தில் 2020 ஏப்ரல் 28-ம் தேதி முதல் செப்டம்பர் வரை மருத்துவர்கள், செவிலியருக்கு உணவு மற்றும் தங்கும் விடுதிக்காக 6 கோடியே 56 லட்ச ரூபாய் செலவு செய்தது, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்ததாக, நெல்லையை சேர்ந்த சமூக ஆர்வலர் பிரம்மா தெரிவிதுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்த விரிவான அறிக்கை கோரியிருந்த நிலையில் அதில் 5 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு மட்டுமே கணக்கு வழங்கப்பட்டு உள்ளதால், ஒரு கோடியே 6 லட்சம் ரூபாய் எவ்வாறு செலவிடப்பட்டது என்பது குறித்த தகவல் இல்லை என கூறியுள்ளார்.

இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மீண்டும் எழுப்பிய கேள்விக்கு 2020 செப்டம்பர் மாதம் மட்டும் 2 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவு செய்ததாக தகவல் கிடைத்தது.  எனவே, 2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நெல்லையில் மருத்துவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் விடுதிக்காக மட்டும் 8 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும், கொரோனா முதல் அலையில் மருத்துவர் தங்குவதற்கு ஆயிரத்து 900 ரூபாய் வாடகையும்,  மூன்று வேளை உணவிற்கு 600 ரூபாய் என ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் செலவு செய்தது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்தது.

இதையும் படிங்க: ஹாக்கி விளையாட்டை ஊக்குவிக்க அரசு வழங்கிய நிதி கையாடல்? 

தற்போது, அதே தரமான உணவு மற்றும் தங்குமிடத்திற்கு சேர்த்து மொத்தம் ஆயிரத்து 450 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஆயிரத்து 50 ரூபாய் சேமிக்கப்படுவதும் தெரியவந்துள்ளது. எனவே, அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று  சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Published by:Murugesh M
First published: