தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு... விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள்...

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு... விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள்...

மாதிரி படம்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 • Share this:
  ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 22-02-2021 முதல் 28-02-2021 வரை, அதாவது இன்று வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  கல்வித்தகுதி:

  ஓட்டுநர்:

  ஓட்டுநர் உரிமம் பெற்று வாகனம் இயக்குவதில் மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். கனரக வாகனம் உரிமம் பெற்று அனுபவம் பெற்ற நபர்களுக்கு முன்னிரிமை வழங்கப்படும்.மேலும் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

  அலுவலக உதவியாளர்:

  எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

  தேர்வு செயல் முறை:

  விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  மாத சம்பளம்:

  ஓட்டுநர் : ரூ.19,500-62,000
  அலுவலக உதவியாளர் : ரூ.15,700 – 50,000

  விண்ணப்பிக்கும் முறை:
  http://www.tnhb.tn.gov.in/ என்ற இணைய முகவரி மூலம் 22-02-2021 முதல் 28.02-2021 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: