பெண் நிருபரின் கன்னத்தை தட்டிய ஆளுநர்: கிளர்ந்தெழும் எதிர்ப்புகள்

பெண் நிருபரின் கன்னத்தை தட்டிய  ஆளுநர்: கிளர்ந்தெழும் எதிர்ப்புகள்
பெண் நிருபர் ஒருவரின் கன்னத்தை தட்டும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • News18
  • Last Updated: April 18, 2018, 10:35 AM IST
  • Share this:
பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெண் நிருபர் ஒருவரின் கன்னத்தை தட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அருப்புகோட்டை கல்லூரி மாணவிகளை பேராசிரியர் பாலியல் ரீதியாக தவறான முறையில் நடக்க கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்து அவர் கைது செயப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் நேற்று மாலை கிண்டியில் உள்ள ராஜ் பவனில்  செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் பெண் நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்காமல் அவரது கன்னத்தை தட்டியுள்ளார். ஆளுநரின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

பாதிக்கப்பட அந்த பெண் நிருபர், “எனது கேள்விக்கு பதிலளிக்காமல் எனது அனுமதியில்லாமல் என் கன்னத்தை தட்டியது,   பெரும் கோபத்தை ஏற்படுத்தியது, அதன் பின் என் முகத்தை பலமுறை கழுவினேன். ஆனாலும் அதிலிருந்து என்னால் விடுபட முடியவில்லை, ஆளுநர் ,பாராட்டுக்கான அடையாளமாக, ஒரு தாத்தா  ஸ்தானத்தில் என்னை அவ்வாறு செய்திருக்கலாம் ஆனால் என்னால் அப்படி நினைக்க முடியவில்லை” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Washed my face several times. Still not able to get rid of it. So agitated and angered Mr Governor Banwarilal Purohit. It might be an act of appreciation by you and grandfatherly attitude. But to me you are wrong.

— Lakshmi Subramanian (@lakhinathan) April 17, 2018

ஆளுநரின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது, இது போன்ற பதவியில் இருப்பவரின் செயல் ஏற்புடையதல்ல என பலரும் கூறி வரும்  நிலையில் பத்திரிக்கையாளர்கள், ஆளுநர் தன் செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.

இதே போல சமீபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேள்வி கேட்ட பெண் நிருபர் ஒருவருக்கு  பதிலளிக்காமல், அவரை அழகாக இருக்கிறீர்கள் என பதில் கூறியது குறிப்பிடத்தக்கது.
First published: April 18, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading