முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மக்களே உஷார்! : “இன்று இரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும்” - பரவும் செய்தி உண்மையா?

மக்களே உஷார்! : “இன்று இரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும்” - பரவும் செய்தி உண்மையா?

மின்சார வாரியம் விளக்கம்

மின்சார வாரியம் விளக்கம்

இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியமான TANGEDCO தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

கரண்ட் பில் கட்டலைன்னா மின்சாரம் துண்டிக்கப்படும் என தகவல் பரவிவரும் நிலையில் இது குறித்து மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

நீங்கள் கடந்த மாதத்திற்காக மின் கட்டணத்தை கட்டவில்லை எனவே இன்று இரவு 10:30 மணி முதல் உங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என உங்கள் செல்போனுக்கு மெசேஜ் வந்திருக்கிறதா? அச்சப்பட வேண்டாம் அது வெறும் போலி செய்தி.

பெயர் தெரியாத நம்பரில் இருந்து இது போன்ற குறுஞ்செய்திகள் மின் நுகர்வோருக்கு அனுப்பப்படுகிறது. அதில் பெயர், மின் இணைப்பு எண் என எந்த தகவலும் இருக்காது. அந்த செய்தியில் ‘அன்பார்ந்த நுகர்வர்களே கடந்த மாதத்திற்கான மின் கட்டணத்தை செலுத்தவில்லை என்பதால் உங்களின் மின் இணைப்பு இன்று இரவு 10.30 மணி முதல் துண்டிக்கப்படும். மேலும் தகவல்களுக்கு 06201314601 என்ற எண்ணில் மின்சார வாரிய அதிகாரியை தொடர்பு கொள்ளவும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் பொதுமக்கள் இடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த பயனர் ஒருவர், தனக்கு வந்த இந்த குறுஞ்செய்தியை பதிவிட்டு, இது அலுவல் பூர்வ செய்தி இல்லை தானா? இது ஒரு முறையற்ற (spam) செய்தியென்றால் எப்படி தடுப்பது? என மின்வாரியத்திடம் கேட்டுள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியமான TANGEDCO தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில், நுகர்வோர் கவனத்திற்கு, இந்த போலியான குறுஞ்செய்தி பரவி வருகிறது. இது போன்ற குறுஞ்செய்தி ஒருபோதும் எங்களிடமிருந்து வராது. பொருட்படுத்தாதீர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

First published:

Tags: Cyber crime, Scam, TNEB