முகப்பு /செய்தி /தமிழ்நாடு / EBயை ஆதாருடன் இணைக்கவில்லையா? மின் கட்டணம் செலுத்த அவகாசம்... மின்சார வாரியம் அறிவிப்பு..

EBயை ஆதாருடன் இணைக்கவில்லையா? மின் கட்டணம் செலுத்த அவகாசம்... மின்சார வாரியம் அறிவிப்பு..

ஆதார்

ஆதார்

ஆதார் எண்ணை இணைக்காதவர்களால் மின் கட்டணம் செலுத்த இயலவில்லை.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆதார் எண்ணை இணைக்காத மின் நுகர்வோர், மின் கட்டணம் செலுத்துவதற்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக மின் நுகர்வோர்களுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து, அதை சரிபார்த்த பிறகே இணையவழியிலும், நேரடியாகவும் மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஆதார் எண்ணை இணைக்காதவர்களால் மின் கட்டணம் செலுத்த இயலவில்லை. இந்நிலையில் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 24 முதல் நவம்பர் 30ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த வேண்டிய தாழ்வழுத்தப் பிரிவு மின்நுகர்வோர்களுக்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

விவசாயிகளே! இந்த முறை ₹2000 பெற ஆதார் எண் கட்டாயம் இணைக்கனும்...! எளிமையாக இணைக்க இதோ வழி...

மேலும் ஆதார் இணைக்காமல் உள்ள நுகர்வோருக்கு மட்டுமே இவ்வாறு அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அவர்களுக்கு அபராத கட்டணம் வசூலிக்கப்படாது எனவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

top videos
    First published:

    Tags: Aadhaar card, EB Bill