அரசியல் நாகரீகமற்றவர் வைகோ: கே.எஸ். அழகிரி கடும் சாடல்

உலகின் மிக அழகிய நிலப்பரப்பை இந்தியாவோடு சேர்த்த பெருமை நேருவுக்கு உண்டு என்றும், காங்கிரஸ் செய்த துரோகத்தைச் சொன்னால், அதற்கு பதில் கூற தயாராக இருப்பதாகவும் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Web Desk | news18
Updated: August 8, 2019, 4:44 PM IST
அரசியல் நாகரீகமற்றவர் வைகோ: கே.எஸ். அழகிரி கடும் சாடல்
கே.எஸ்.அழகிரி மற்றும் வைகோ
Web Desk | news18
Updated: August 8, 2019, 4:44 PM IST
கூட்டணியில் இருந்து கொண்டு, காங்கிரஸ் கட்சியையே விமர்சிக்கும் வைகோ, அரசியல் நாகரீகமற்றவர் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையாக சாடியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில், வைகோ காங்கிரஸ் கட்சியை கடுமையாக குற்றஞ்சாட்டி பேசுவதற்கு, ஏதோ உள்நோக்கம் இருப்பதாக கூறியுள்ளார்.

வைகோ சந்தர்ப்பவாதம் கொண்ட ஒரு பச்சோந்தி என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் அழகிரி சாடியுள்ளார்.


18 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்த திமுகவுக்கு பச்சை துரோகம் செய்தவர் என்றும், 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை வீழ்த்த வலிமையான கூட்டணி அமைத்தபோது, அதற்கு எதிராக சதி திட்டம் தீட்டி, மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கியவர் வைகோ என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உலகின் மிக அழகிய நிலப்பரப்பை இந்தியாவோடு சேர்த்த பெருமை நேருவுக்கு உண்டு என்றும், காங்கிரஸ் செய்த துரோகத்தைச் சொன்னால், அதற்கு பதில் கூற தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அண்ணாவின் பெயரை மூச்சுக்கு 300 தடவை கூறும் வைகோ, காஷ்மீர் மாநிலத்தில் சுயாட்சியை பறிக்கும் பாஜகவின் சதிக்கு துணை போகலாமா என கேள்வி எழுப்பியுள்ள அழகிரி, கூட்டணியில் இருந்து கொண்டு, காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் வைகோ, அரசியல் நாகரீகமற்றவர் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Loading...Also see...

First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...