ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மோடியும், எடப்பாடியும் தேர்தல் முடிவுகளை அறிந்தே சோர்வாக உள்ளனர்: கே.எஸ்.அழகிரி!

மோடியும், எடப்பாடியும் தேர்தல் முடிவுகளை அறிந்தே சோர்வாக உள்ளனர்: கே.எஸ்.அழகிரி!

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி.

பொன்பரப்பி விவகாரத்தை கண்டித்து, நாளை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்படவுள்ள போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்பார்கள் என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  மோடியும், எடப்பாடியும் தேர்தல் முடிவுகளை அறிந்தே சோர்வாக காணப்படுகிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

  சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர் ராமசாமி, முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.

  அதன் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கே.எஸ்.அழகிரி, ''அனைத்து தொகுதிகளிலும் மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

  மோடியும், எடப்பாடியும் தேர்தல் முடிவுகளை அறிந்தே சோர்வாக காணப்படுகிறார்கள். ஸ்டாலினுடன் இடைத்தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என்பது குறித்து விவாதித்தோம். நான்கு தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக வெற்றி பெற பாடுபடுவோம்.

  சாலைகள் போடும் திட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி எதிரானது அல்ல. எட்டுவழிச்சாலை திட்டத்திற்கான வரைவு அதற்காக தயாரிக்கப்பட்டது அல்ல. வளர்ச்சித் திட்டங்கள் நாட்டுக்கு தேவை, ஆனால் அதை தனிப்பட்ட பலன்களுக்காக செய்யக்கூடாது.

  பொன்பரப்பி விவகாரத்தைக் கண்டித்து, நாளை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்படவுள்ள போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்பார்கள்.

  ரபேல் விவகாரத்திற்கு மோடி பதில் சொல்லியே ஆகவேண்டும். அதற்கான தண்டனையை அவர் பெறுவார் என்று’’ என்று கே.எஸ்.அழகிரி பேசினார்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: K.S.Alagiri