• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • TNAgriBudget2021 | தமிழக வரலாற்றில் முதல்முறை - சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்

TNAgriBudget2021 | தமிழக வரலாற்றில் முதல்முறை - சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்

விவசாயிகள்

விவசாயிகள்

தமிழக சட்டசபை வரலாற்றில், முதல் முறையாக இன்று வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது

  • Share this:
    தமிழ்நாட்டில் முதல் முறையாக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. தமிழக அரசு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் வேளாண்மை துறைக்காக தனி பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவைக்கு அளிப்பார்.

    இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதைத் தொடர்ந்து வேளாண்மை துறை, தனி முக்கியத்துவம் பெறும் துறையாக மாறிவிடும். அந்த துறையின் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட நடைமுறைகளை அந்தத் துறையே வகுத்துக்கொள்ளலாம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் இதுவும் முதல்முறை பட்ஜெட்டாக அமைகிறது. இந்த பட்ஜெட் விவசாயிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வேளாண் பட்ஜெட்டில் வேளாண் துறை, கால்நடைத்துறை, பால்வளத்துறை போன்றவற்றில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள், அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு விபரங்கள் இடம்பெறும். தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளிடம் கருத்துகளைக் கேட்டறிந்து, அதன் அடிப்படையில் வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: