• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொரோனா ஃபேக்டரியாக தி.நகர் மாறிவிடக்கூடாது: அமைச்சர் மா.சுப்ரமணியன்

கொரோனா ஃபேக்டரியாக தி.நகர் மாறிவிடக்கூடாது: அமைச்சர் மா.சுப்ரமணியன்

கொரோனா ஃபேக்டரியாக தி.நகர் மாறிவிடக்கூடாது என அமைச்சர் மா.சுப்ரமணியன் அச்சம் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    வருகின்ற நவம்பர் 4ம் தேதி (வியாழக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் தீபாவளிக்கு வேண்டிய துணிமணிகளை வாங்கி வருகின்றனர். இதனால், சென்னை தி.நகரில் அதிகளவில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    மேலும், இங்கு ஷாப்பிங் வரும் பெரும்பாலான மக்கள் முக கவசமும் அணிவதில்லை, சமூக இடைவெளியையும் கடைப்பிடிப்பதில்லை. இதுபோன்ற அளவுக்கு அதிகமான மக்கள் ஒரே இடத்தில் கூடுவதால் அங்கு பெருமளவில் கொரோனா பரவும் வாய்ப்புகள் உள்ளதாக அஞ்சப்படுகிறது.

    இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன் கூறும்போது, மக்கள் நல்வாழ்வுத்துறை, சென்னை மாநகராட்சி, காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் 3ம் தேதி நள்ளிரவு 12மணி வரை இந்த விழிப்புணர்வு நிகழச்சி நடைபெறும்.

    கேமராக்கள் மூலம் மக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. முறையாக முகக்கவசம் அணியாமல் ஸ்டைலாக மக்கள் வருகின்றனர். துர்கா பூஜை முடிந்த பின்னர் அசாம், மேற்கு வங்கத்தில் கொரோனா அதிகரித்தது. ஓணம் பண்டிகைக்கு பிறகு கேரளாவில் கொரோனா அதிகரித்தது.

    கொரோனா ஃபேக்டரியாக தி.நகர் மாறிவிடக்கூடாது. ரங்கநாதன் தெருவில் உள்ள சிறிய உணவுக்கடைகள் கொரோனா பரவ காரணமாக அமைகிறது. எனவே இன்று முதல் தீபாவளி முடியும் வரை அந்த கடைகள் மூடப்படும். இதற்காக வியாபரிகள் எங்களை மன்னிக்க வேண்டும்.

    உங்களின் வருமானம் குறையும் என்றாலும் மக்களின் உயிர் முக்கியம். பொருட்களை வாங்க வருபவர்கள் குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: