ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தி.நகரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியை குழந்தைகள் மற்றும் மகப்பேறு சிறப்பு மருத்துவமனையாக மாற்ற முடிவு?

தி.நகரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியை குழந்தைகள் மற்றும் மகப்பேறு சிறப்பு மருத்துவமனையாக மாற்ற முடிவு?

மாதிரி படம்

மாதிரி படம்

மருத்துவமனையை மாற்ற சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை தி.நகரில் உள்ள பாண்டி பஜார் மாநகராட்சி தொடக்கப்பள்ளியை குழந்தைகள் மற்றும் மகப்பேறு சிறப்பு மருத்துவமனையாக மாற்றவும், அந்த பள்ளியில் உள்ள 81 குழந்தைகளை அருகிலுள்ள பள்ளிகளுக்கு மாற்றவும் தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் சென்னை மாநகராட்சிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை தி நகரில் மக்கள் அடர்த்தி அதிகம் இருக்கும் பகுதி. அந்த இடத்தில் அரசு மருத்துவமனைகள் இல்லை. இதனால் அந்த பகுதியில் அவசர காலங்களில் மக்கள் சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. எனவே, அந்த பகுதியில் மருத்துவமனை அமைக்க ஏதுவான இடம் இல்லாத காரணத்தால், பாண்டி பஜார் மாநகராட்சி தொடக்கபள்ளி அமைந்துள்ள இடத்தில் மருத்துவமனை அமைக்கும் திட்டத்தை தி நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மாநகராட்சியிடம் முன்வைத்துள்ளார்.

இது குறித்து தி நகர் சட்டமன்ற உறுப்பினர் கூறுகையில், அந்த பள்ளியில் இருந்து 200 மீட்டரில் மற்றொரு மாநகராட்சி பள்ளி இருப்பதன் காரணமாக இங்குள்ள மாணவர்களை அங்கு மாற்றலாம். 11 கிரவுண்ட் இடம் இங்கு இருப்பதாகவும், தி நகரில் வேறு எங்கும் பெரிய இடம் இல்லை என்றார்.

இதையும் படிங்க: 55 ஆண்டுகளுக்கு பின் கடல் கடந்து தந்தையின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்திய மகன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

அடுத்த கட்டமாக இந்த இடத்தில் எவ்வளவு சதுர அடிக்கு கட்டடங்கள் கட்ட முடியும்? மருத்துவமனை அமைப்பதற்கான சூழல் இருக்கிறதா என்பதை ஆராய்ந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், மருத்துவமனை கட்ட அனுமதி கிடைக்கும் பட்சத்தில் இந்த கல்வியாண்டு முடிவில் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிக்கு மாற்றிவிட்டு கட்டிடங்களை கட்டும் பணி நடைபெறும் என்றும் தெரிவித்தார். இதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

Published by:Arunkumar A
First published:

Tags: Chennai corporation