நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கக் கூடாது என, தமிழக எழுத்தாளர்கள்,கலைஞர்கள் மற்றும் மருத்துவர்கள் பலர் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனர்.
"ஜனநாயகத்தை காப்போம்" என்ற தலைப்பில், கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மருத்துவர்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் பங்கேற்ற கருத்தரங்கம், சென்னை ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கில், திரைப்பட இயக்குனர்கள் லெனின் பாரதி, பாலாஜி சக்திவேல், பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன், பத்திரிகையாளர்கள் விஜய் சங்கர், ஆழி செந்தில்நாதன்,அய்யநாதன், எழுத்தாளர்கள் மார்க்ஸ், சுகிர்தராணி, மருத்துவர்கள் எழிலன் நாகநாதன், ஷாலினி மற்றும் கல்வியாளர் வசந்தி தேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன், நாட்டின் மக்களாட்சி வேர்கள் அழிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். மத்திய அரசின் தவறான முடிவுகளால், சிறு,குறு தொழில்கள் நலிந்து வருவதாக குற்றம்சாட்டினார்.
நாட்டில் கருத்துரிமை பறிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டிய மருத்துவர் எழிலன் நாகநாதன், ஆர்.எஸ்.எஸ். - பாஜக-வுக்கு எதிராக இயங்குபவர்கள் சுடப்பட்டு வருவதாகவும் விமர்சித்தார்.
இதனைத் தொடர்ந்து, அனைவரும் இணைந்து மத்திய பாஜக அரசுக்கு எதிராக கூட்டறிக்கை வெளியிட்டனர். அதில், உணவுக்காகவும், கடவுள்களுக்காகவும் சாமானிய மக்கள் கொல்லப்படுவது நம் தேசத்திற்கு புதிதானவை எனவும், இதனை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டது
Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.