Home /News /tamil-nadu /

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..

கனமழைக்கு வாய்ப்பு

கனமழைக்கு வாய்ப்பு

TN Rain Update | சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

    மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இன்று முதல் வரும் ஜூலை 8ம் தேதி வரைக்குமான சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பு பின்வருமாறு...

    04.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    05.07.2022 முதல் 07.07.2022 வரை : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    08.07.2022 : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னையை பொறுத்தவரை:

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

    கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

    சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்)) 10, அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) 9, வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 7, சோலையாறு (கோயம்புத்தூர்), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) தலா 6, மேல் பவானி (நீலகிரி), செருமுள்ளி (நீலகிரி), கூடலூர் பஜார் (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி), வூட் பிரையூர் எஸ்டேட் (நீலகிரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) தலா 5, பார்வூட் ((நீலகிரி) 4, கிளென்மோர்கன் (நீலகிரி), தேவாலா (நீலகிரி), கோவிலாங்குளம் (விருதுநகர்), மிமிசல் (புதுக்கோட்டை), அருப்புக்கோட்டை KVK (விருதுநகர்) தலா 3, சிவலோகம் (கன்னியாகுமரி), பெரியார் (தேனி), தேக்கடி (தேனி), எமரால்டு (நீலகிரி) தலா 2

    மீனவர்களுக்கான எச்சரிக்கை :

    04.07.2022 முதல் 06.07.2022 வரை: குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தமிழக - ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    04.07.2022 முதல் 08.07.2022 வரை:  லட்சத்தீவு பகுதி, கர்நாடகா - கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Heavy rain, Rain Update, Weather News in Tamil

    அடுத்த செய்தி