தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

மாதிரிப் படம்

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் பெரும்பாலான மாவட்டங்களில் கோடை மழை பெய்து மக்களை குளிர்வித்து வருகிறது. மதுரையில் நள்ளிரவு ஒரு மணி அளவில் தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. மதுரை நகர்ப் பகுதிகளான தெப்பக்குளம், ஐராவதநல்லூர், அண்ணாநகர், காமராஜர் சாலை, கோரிப்பாளையம், கே.கே நகர், மாட்டுத்தாவணி, புதூர், ஒத்தக்கடை, அவனியாபுரம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பரவலாக பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  அதேபோல் நேற்று மாலை ராமநாதபுரத்திலும் மழை பெய்தது. அடுத்த 10 நிமிடத்திற்கு உள்ளாகவே பஜார் சிகில்ராஜ வீதியில் தண்ணீர் தேங்கியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. நேற்று திருச்சி நகரத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்த நிலையில் இன்று கோவை தொண்டாமுத்தூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 15 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை, சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை ஆங்காங்கே பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Sheik Hanifah
  First published: