வெளிமாநிலத்தில் தயாரிக்கப்பட்டதால் பேருந்துகளில் இந்தி ஸ்டிக்கர்கள் - போக்குவரத்துத் துறை விளக்கம்

அவசர வழி உள்ளிட்ட குறிப்புகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்கும் புகைப்படங்கள் வெளியானது.

வெளிமாநிலத்தில் தயாரிக்கப்பட்டதால் பேருந்துகளில் இந்தி ஸ்டிக்கர்கள் - போக்குவரத்துத் துறை விளக்கம்
இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அறிப்புகள்
  • News18
  • Last Updated: July 7, 2019, 1:30 PM IST
  • Share this:
தமிழக அரசு சார்பில் புதிதாக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பேருந்துகளில் தமிழ் அல்லாது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்த புகைப்படங்கள் வெளியாகியிருந்த நிலையில், இதற்கு போக்குவரத்துத்துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை சார்பில் சமீபத்தில் 500 புதிய பேருந்துகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

விரைவுப்போக்குவரத்துக்கழகம், மாநகரப்போக்குவரத்து கழகம் உள்ளிட்ட பல்வேறு கோட்டங்களுக்கு இந்த பேருந்துகள் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது.





விரைவுப் போக்குவரத்துக்கழகத்தில் புதிதாக இயக்கப்பட்ட பேருந்துகளில் அவசர வழி உள்ளிட்ட குறிப்புகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்கும் புகைப்படங்கள் வெளியானது.



இதற்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்திருந்தார்.

 



இந்த நிலையில், வெளிமாநிலங்களில் பேருந்துகள் தயாரிக்கப்பட்டதால் இந்தி, ஆங்கிலத்தில் ஸ்டிக்கர்கள் இருந்ததாகவும், பேருந்துகளை பயணிகள் பயன்பாட்டுக்கு விடுவதற்கு முன்னதாக ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டுவிட்டதாகவும் போக்குவரத்துத்துறை விளக்கம் அளித்துள்ளது.

First published: July 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்