TASMAC: 2 நாட்கள் டாஸ்மாக் அடைப்பு; ஒரே நாளில் ரூ.292 கோடிக்கு மது விற்பனை!

TASMAC:  2 நாட்கள் டாஸ்மாக் அடைப்பு; ஒரே நாளில் ரூ.292 கோடிக்கு மது விற்பனை!

டாஸ்மாக்

அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் 63 கோடியே 44 லட்ச ரூபாய்க்கு மது விற்பனையானது.

  • Share this:
    தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 292 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது

    தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இரவு நேரம் மற்றும் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, மே.1 தொழிலாளர் தின விடுமுறை மற்றும் மே.2 ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு முன்கூட்டியே அறிவித்தது.

    இதையடுத்து, மது பிரியர்கள் இரண்டு நாட்களுக்கு தங்களுக்குத் தேவையான மதுபானங்களை நேற்று வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர். இதனால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. அதேவேளையில் அரசு அறிவித்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காற்றில் பறந்தன.

    இந்நிலையில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 292 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் 63 கோடியே 44 லட்ச ரூபாய்க்கு மது விற்பனையானது. திருச்சி மண்டலத்தில் 56 கோடியே 72 லட்சத்திற்கும், சேலம் மண்டலத்தில் 55 கோடியே 93 லட்ச ரூபாய்க்கும் மது விற்பனையானது. மதுரை மண்டலத்தில் 59 கோடியே 63 லட்ச ரூபாய்க்கும், கோவையில் 56 கோடியே 37 லட்சத்திற்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: