அமைச்சர் தங்கமணி வீட்டை முற்றுகையிடுவோம் - டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை!

கோப்புப்படம்

சென்னை பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டை தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் பார் மற்றும் கட்டிட உரிமையாளர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  பார்களை திறக்க அரசு அனுமதி வழங்காவிட்டால் அமைச்சர் தங்கமணி வீட்டை முற்றுகையிடுவோம் என தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் மக்கள் கூடும் இடங்கள் அனைத்தையும் மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன் பின்னர் படிப்படியாக அளிக்கப்பட்ட தரவுகளின் படி கோவில்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்டவை அனைத்தையும் திறக்க அரசு அனுமதி கொடுத்தது.

  இருப்பினும் டாஸ்மாக் பார்களை திறக்க இன்னும் அரசு அனுமதி வழங்கவில்லை கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக மூடப்பட்டிருக்கும் பார்களை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  Also read... காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் வருமான வரி வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு...!

  8 மாதங்களாக பார்கள் மூடப்பட்டிருக்கிறது இதனால் இடத்திற்கு வாடகை செலுத்த கூட வழி இல்லாமல் கடன் வாங்கி வாடகையை கொடுத்துக் கொண்டு இருப்பதாகவும் இருமுறை மனு அளித்தும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆகவே எல்லாவற்றுக்கும் அனுமதி அளித்த அரசு பார்களை மட்டும் ஏன் இன்னும் திறக்க அனுமதி வழங்கவில்லை. தொடர்ந்து டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் கேள்விக்கு வந்தனர்.

  இந்நிலையில் சென்னை பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டை தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் பார் மற்றும் கட்டிட உரிமையாளர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

  இந்தக் கூட்டத்தில் பார்களை திறக்க அமைச்சர் அனுமதி வழங்கவில்லை என்றால் அமைச்சர் தங்கமணி வீட்டை ஓரிரு நாட்களில் முற்றுகையிடுவோம் என டாஸ்மாக் பார் சங்க நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vinothini Aandisamy
  First published: