Home /News /tamil-nadu /

நூறு சதுப்பு நிலங்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு - நீதிமன்றத்தில் தமிழ அரசு விளக்கம்

நூறு சதுப்பு நிலங்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு - நீதிமன்றத்தில் தமிழ அரசு விளக்கம்

சதுப்பு நிலம் (கோப்புப் படம்)

சதுப்பு நிலம் (கோப்புப் படம்)

நாடு முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் வகையில் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க ஏதுவாக அனைத்து உயர் நீதிமன்றங்களும் தாமாக முன் வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தமிழகத்தில் உள்ள நூறு சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு முதல் முறையாக தமிழ்நாடு சதுப்பு நிலங்கள் இயக்கத்தை அறிவித்துள்ளதாக தமிழ்நாடு சதுப்பு நில ஆணையம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் வகையில் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க ஏதுவாக அனைத்து உயர் நீதிமன்றங்களும் தாமாக முன் வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு சதுப்பு நில ஆணையம் சார்பில், அதன் உறுப்பினர் செயலர் தீபக் ஸ்ரீவஸ்தவா தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், மத்திய அரசு கொண்டு வந்த சட்டப்படி, மாநில அளவில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள முக்கியமான 100 சதுப்பு நிலங்களை அடையாளம் கண்டு, அவற்றை மீட்டெடுக்கும் வகையில் தமிழ்நாடு சதுப்பு நில இயக்கம் என்ற அமைப்பை தமிழக அரசு முதல் முறையாக அறிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Also read... சென்னை விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை... விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

இந்த நூறு சதுப்பு நிலங்களில் 13 சதுப்பு நிலங்களை ராம்சிர் சதுப்பு நிலங்களாக அறிவிப்பதற்கான கருத்துருக்கள், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்டுள்ள 100 சதுப்பு நிலங்களை, சதுப்பு நிலங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அறிவிக்க வேண்டும் எனவும், இந்த நடைமுறையில் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல துறைகளின் ஒப்புதலை பெற வேண்டியுள்ளதால், தாமதம் ஏற்பட்டதாகவும், வரைவு அறிவிப்புக்கு மாநில அரசின் ஒப்புதலை பெற நான்கு வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madras High court

அடுத்த செய்தி