முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அரசு பேருந்து பயணிகளுக்கு குட்நியூஸ் - வெளியான முக்கிய அறிவிப்பு

அரசு பேருந்து பயணிகளுக்கு குட்நியூஸ் - வெளியான முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அமைச்சர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அமைச்சர்

போக்குவரத்து நடவடிக்கைகள் தொடர்பாக புகார்கள் ஏதும் இருந்தால், அதனை பெறுவதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அரசு பேருந்துகள் குறித்த புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்களை அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார்.  மேலும், போக்குவரத்துத்துறை சார்பில் arasubus.tn.gov.in என்ற புதிய இணையதளத்தையும்  அமைச்சர் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கீழ், கிட்டத்தட்ட  20,000க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கி வருகின்றன. நாளொன்றுக்கு சுமார் 1.5  கோடி பேர் அரசு போக்குவரத்தில் பயணித்து வருகின்றனர். 7,321 சாதாரண நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், தினமும் சுமார் 39 லட்சம் பெண்கள் பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நகரம், நகரங்களுக்கு இடையே, மாநிலங்களுக்கு இடையே செல்லும் பயணிகள் போக்குவரத்து நடவடிக்கைகள் தொடர்பாக புகார்கள் ஏதும் இருந்தால், அதனை பெறுவதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Govt Bus