Home /News /tamil-nadu /

BREAKING | 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு - பிற்பகலுக்குள் முடிவெடுக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

BREAKING | 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு - பிற்பகலுக்குள் முடிவெடுக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கோப்புப்படம்

கோப்புப்படம்

SSLC Public Exam | உயர் நீதிமன்ற உத்தரவுக்கிடையே அமைச்சர் செங்கோட்டையன் முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஏன் ஒரு மாதத்திற்கு தள்ளிவைக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் இது தொடர்பாக இன்று பிற்பகல் 2.30 மணிக்குள் முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, பிளஸ்-1 இறுதிநாள் தேர்வு மற்றும் பிளஸ்-2 இறுதிநாள் தேர்வு எழுதாதவர்களுக்கான தேர்வுகள் வருகிற 15ஆம் தேதி தொடங்குகின்றன. அதன்படி, தேர்வு மையத்துக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களை வரிசைப்படுத்தி தினமும் தெர்மா மீட்டர் மூலம் உடல் வெப்பத்தை பரிசோதிக்க வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக, விசிக, பாமக, காங்கிரஸ், இடதுசாரிகள் என்று பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

    இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடர்ப்பட்ட நிலையில், இன்று அதனை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

    மேலும், தேர்வை 1 மாதம் ஒத்திவைப்பது தொடர்பாக பிற்பகலுக்குள் பதிலளிக்க அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதற்கிடையே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், முதல்வர் உடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.








    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Published by:Sankar
    First published:

    Tags: Public exams

    அடுத்த செய்தி