Home /News /tamil-nadu /

சுகாதாரத்தில் தமிழகம் பின்தங்கியதற்கு திமுகவும் பொறுப்பு - பொன். ராதாகிருஷ்ணன்

சுகாதாரத்தில் தமிழகம் பின்தங்கியதற்கு திமுகவும் பொறுப்பு - பொன். ராதாகிருஷ்ணன்

பொன்.ராதாகிருஷ்ணன்

பொன்.ராதாகிருஷ்ணன்

அந்நிய கைக்கூலிகள் திடீரென அணு விஞ்ஞானிகளாக மாறி அணு உலைக்கு எதிராக பேசுவதாக பொன் ராதா கிருஷ்ணன் குற்றம் சாட்டினார். 

  • News18
  • 1 minute read
  • Last Updated :
சுகாதாரத்துறையில் தமிழகம் பின்தங்கியதில் திமுகவுக்கும் பொறுப்பு உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சுகாதாரத்துறையில் முன்னிலை வகிக்கும் மாநிலங்கள் பட்டியலை நிதி ஆயோக் அமைப்பு நேற்று வெளியிட்டது. கடந்தாண்டு 3-வது இடத்தில் இருந்த தமிழகம் இந்த ஆண்டு 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

கேரளா முதலிடத்திலும் உத்தரப்பிரதேசம் கடைசி இடத்திலும் பட்டியலில் இருக்கிறது. தமிழகம் பின்தங்கியது தொடர்பாக பேட்டியளித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் “நிதி ஆயோக் எடுத்துக்கொண்ட தரவுகளில் தவறு இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், சுமார் 50 ஆண்டுகளாகவே பின்னடைவு இருக்கிறது. இந்த பின்னடைவுக்கு திமுகவுக்கும் பொறுப்பு இருக்கிறது என்று கூறினார்.

அந்நிய கைக்கூலிகள் திடீரென அணு விஞ்ஞானிகளாக மாறி அணு உலைக்கு எதிராக பேசுவதாக பொன் ராதா கிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

Published by:Sankar
First published:

Tags: Pon Radhakrishnan

அடுத்த செய்தி