பிப்ரவரி 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்களுக்கு வகுப்பறையில் நேரடி வகுப்பு நடத்துவதா அல்லது ஆன்லைன் மூலம் பாடம் நடத்துவதா என்பது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஜனவரி மாதத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. முதலில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலும் பின்னர் 9,10,11,12 ஆகிய வகுப்புகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. தற்போது தமிழகத்தில் தொற்று தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால் தமிழக அரசு கூடுதல் தளர்வுகளை அறிவித்தது.
அதன்படி, பிப்ரவரி 1ம் தேதி முதல் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 100 சதவீத மாணவர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பள்ளிகளில் கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட சுகாதார பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: பாழடைந்து போன வேலுநாச்சியார், மருது சகோதரர்களின் போர் பயிற்சிக்கூடம்
இந்நிலையில், தமிழகத்தில் தற்போது தினசரி பாதிப்பு 20ஆயிரத்தை தாண்டக்கூடிய நிலையில் 100 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என அரசு அறிவித்துள்ள போதிலும் கொரோனா குறித்த அச்சம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இடையே உள்ளது. இந்நிலையில், மாணவர்கள் நேரடியாக பள்ளிகளுக்கு வரவேண்டுமா அல்லது ஆன்லைன் வழியில் பாடங்களை கற்பதா என்பதை பள்ளிகளே முடிவு செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.